அண்ணா பல்கலை.யில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு
சென்னை, அக். 25- பல்கலைக் கழக மானியக்குழு (யுசிஜி) உத்தரவுக்கு மாறாக அண்ணா பல்கலைக்கழ கத்தில் உதவிப் பேராசிரி யர் பணிக்கு பிஎச்.டி. கட் டாயம் என அறிவித்த தால் பட்டதாரிகள் அதி ருப்தி அடைந்துள்ளனர். மேலும், இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற் றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் 4 வளாக கல் லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், நூலகர்உள்ளிட்ட பதவி களில் 352 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 13ஆம் தேதி வெளியிட் டது. இந்தப் பணியிடங் கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள் ளன. இதற்கான விண் ணப்பப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணிகளில் சேர யுஜிசி சார்பில் கல்வித் தகுதிகள் வரையறை செய் யப்பட்டுள்ளன.
அதன்படி, உதவிப் பேராசிரியர் பணிக்கு முது நிலை பட்டப் படிப்புடன், நெட் - ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். இல்லை யெனில் பிஎச்.டி. முடித் திருப்பது அவசியமாகும். இந்நிலையில், கல்வித் தரத்தை உயர்த்தும் நோக் கில் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட் டம் கட்டாயம் எனவும், இந்த நடைமுறை 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகும் எனவும் யுஜிசி 2018இ-ல் அறிவிப்பு வெளியிட்டது.
அதேநேரம், கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக உயர்கல்வி நிறுவனங்கள் பாதிக்கப் பட்டதால், உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. தகுதி கட்டாயம் என்ற விதிமுறையிலிருந்து 2023 வரை விலக்கு அளித்து யுஜிசி உத்தரவிட் டது. அதற்குமாறாக, உத விப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. கட்டாயம் என்ற அண்ணா பல்கலைக்கழ கத்தின் அறிவிப்பு பட்ட தாரிகளிடம் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முது நிலைப் பட்டதாரிகள் கூறும்போது, "கரோனா பரவலால் பிஎச்.டி. படிப்பை முடிப்பதில் பட்டதாரிகள் பலருக்கு காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. பிஎச்.டி. கட்டா யம் என்ற விதியை யுஜிசி தளர்த்தியுள்ளது. மேலும், ஏஅய்சிடிஇவிதிகளின் படி பொறியியல் அல் லாத அறிவியல், மொழி உள்பட இதர பாடப் பிரி வுகளில் முதுநிலைப் படிப் புடன் நெட்-ஸ்லெட் தகு தித்தேர்வில் பட்டதாரி கள் தேர்ச்சி பெற்றிருந் தால் போதும். அதற்கு மாறாக, அனைவருக்கும் பிஎச்.டி. கட்டாயம் என்ற அறிவிப்பால் பலரின் வேலைவாய்ப்பு கேள்விக் குறியாகி யுள்ளது.
எனவே, யுஜிசியின் உத்தரவைப் பின்பற்றி, பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழ கம் முன்வர வேண்டும்" என்றனர்.
அகில இந்திய தனி யார் கல்லூரிஆசிரியர்க ளின் கூட்டமைப்பு தலை வர் கே.எம்.கார்த்திக் கூறி யதாவது: தமிழ்நாடு அர சின் சட்டவிதிகளைமீறி பல ஆண்டுகளாக பழங் குடியினர் பிரிவுக்கான இடஒதுக்கீட்டை வழங் காமல், அண்ணா பல்கலைக் கழகம் பணியிடங்களை நிரப்பி வருகிறது.
2020இல் 312 இடங் களை நிரப்புவதற்கு அண்ணா பல்கலைக்கழ கம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதிலும் பழங்குடியினர் பிரிவு இடங்கள் வழங்கப்பட வில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளது.
இந்நிலையில், மீண் டும் திருத்தி வெளியிட்ட அறிவிப்பாணையிலும் பழங்குடியினர் பிரிவுக்கு ஓர் இடம்கூட ஒதுக்கப் படவில்லை. இது நீதிமன் றத்தை அவமதிக்கும் செயலாகும். அதேபோல, வன்னியருக்கான 10.5 சத வீத சிறப்பு இடஒதுக்கீடும் அமல் படுத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழ் நாடு அரசுதலையிட்டு, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பணியிடங் களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment