பட்டாசு வழக்கு; சரவெடிக்கு தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

பட்டாசு வழக்கு; சரவெடிக்கு தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, அக்.30 பட்டாசு வழக் கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு களை அனைவரும் பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழாக்காலத்தின் போது பட் டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற் பனை செய்யக்கூடாது என்றும் கட் டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரியும், பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த மனுக்கள் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று (29.10.2021) விசாரணைக்கு வந்த போது, பசுமை பட்டாசு தயாரிப்பில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபரின் மகிழ்ச் சிக்காக பிறரின் உடல் நலத்தையும், உயிரையும் பாதிக்கும் பட்டாசுகளை அனுமதிக்க முடியாது எனக் கூறினர். மக்களின் அடிப்படை உரி மைகளை நிலைநாட்டவே நீதி மன்றம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், விதி மீறல் இல்லை என்ற பட்டாசு உற்பத்தியாளர்களின் கூற்று முற்றிலும் தவறானது என் றும், விதி மீறல் தொடர்பான ஆய்வு முடிவுகளும் உள்ளன என்றும் கூறி வழக்கை நேற்றைக்கு (29.10.2021) ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில்  இந்த வழக்கு மீண் டும் விசாரணைக்கு வந்த போது, பட்டாசு வழக்கில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தர வுகளை அனைத்து மாநில அரசு களும், யூனியன் பிரதேசங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றம் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொண்டாட்டம் என்ற பெயரில் அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும் இந்த உத்தரவை பொறுத்தவரை, குறிப்பாக முதியவர்கள், குழந்தை களின் சுகாதார நலனை மீறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை, அதே நேரம் பட்டாசு வெடிப்பதை முழு மையாக தடை செய்யவில்லை என் பதை தெளிவுபடுத்தியுள்ள நீதி பதிகள், தடை செய்யப்பட்ட பட் டாசுகளுக்கு மட்டுமே இந்த உத் தரவு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேரியம் நைட்ரேட் ரசா யணம் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கும், சரவெடி பட் டாசுகளுக்கும் ஏற்கனவே உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பட்டாசு வெடிப்பது தொடர்பான நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்ற வேண் டும் என்றும், இந்த உத்தரவுகளை மீறினால், அந்தந்த மாநில தலைமைச் செயலாளர் அல்லது உள்துறை செயலாளர் அல்லது மாநகராட்சி காவல்துறை ஆணை யர் அல்லது காவல்நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்டோர் மீது தனிப்பட்ட முறையில் நட வடிக்கை எடுக்கப்படும் என்ற எச்ச ரிக்கையையும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவின் மூலம் தெரிவித் துள்ளது

No comments:

Post a Comment