சென்னை, அக்.30- இலங்கைத் தமிழர் நலன்காக்க 23 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அர சாணை பிறப்பித்துள்ளது. இதன் தலைவராக சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் மஸ்தானும், துணைத்தலைவராக நாடாளு மன்ற உறுப்பினர் கலாநிதி வீரா சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள மறு வாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நலன் களை பாதுகாப்பது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி 23 பேர் கொண்ட ஆலோசனைக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித் துள்ளது.
முகாம்களில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத் துதல், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பிற்கான உதவிக்கு வகை செய்தல், குடியுரிமை வழங்குவது மற்றும் இலங்கைக்கு விரும்பி செல்வோருக்கு உதவுவது ஆகிய 3 அம்சங்களை உள்ளடக்கி இந்த ஆலோசனைக்குழு செயல்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் குழுவுக்கு சிறு பான்மையினர் நலத்துறை அமைச் சர் மஸ்தான் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள் ளனர். மறுவாழ்வுத் துறை இயக் குநர் இந்த குழுவின் உறுப்பினர் செயலாளராக இருப்பார். மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின், கல்வியாளர்கள் பாரிவேலன், இ.ரா.இளம்பரிதி, அரசமைப்புச் சட்ட வல்லுநர் மனுராஜ் சண் முகசுந்தரம் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் உள்ளடக் கிய 20 பேர், குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர்.
No comments:
Post a Comment