மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கை

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 1999ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில், நான்கு அனல் மின் நிலையங்களில் ஒப்பந்ததாரர்களிடம் பணியாற்றும் மற்றும் மின் வாரியத்தில் நேரடி ஒப்பந்த தொழிலாளர்கள் 11029  பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று  அறிவித்தப்படி எண்ணூர், வடசென்னை அனல் மின்நிலையங்களில் ஒப்பந்த தொழிலாளராக பணி செய்த எங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மின்வாரியம் பணி வழங்கியது. "ஆறு மாதம் மின்வாரிய பணி செய்த நிலையில் நிர்வாகம் எங்கள் வேலையை பறித்து வெளியேற்றியது. ஏனென்று கேட்க பாதிக்கப்பட்ட சூழலில்; நீதிமன்றத்தை நாடினோம். பல ஆண்டுகள் நடந்த தொழில் தீர்ப்பாய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

வடசென்னை தொழிலாளர்கள் 234 பேருக்கு வடசென்னை அனல்மின் நிலைய நிர்வாகம் வேலையையும் அவர்களுக்கு சேர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை ரூபாய் ஒரு கோடியே 86 லட்சத்தையும் உடனே வழங்க தொழிலாளர்கள் நலவாரிய இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். நிர்வாகம் நீதிமன்றத்தில் தடையாணை பெற்று இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எங்களில் சுமார் 50 பேருக்கு மேல் உயிருடன் இல்லை. மீதி தொழிலாளர்களுக்கும் வயது முதிர்ந்துவிட்டது. எங்களில் பெரும்பாலோர் பெண் தொழிலாளர்கள் வயது மூப்பினாலும், நோயினாலும் அவதிப்படுகிறார்கள்.

எஞ்சியுள்ள எங்களை மீட்டெடுக்க இருள் சூழ்ந்த எங்கள் குடும்ப வாழ்வு ஒளி பெற தமிழ்நாடு அரசுக்கு எங்களை அடையாளம் காட்டுங்கள் என்று எங்கள் குடும்பங்களின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

- மின்வாரிய ஒப்பந்த

தொழிலாளர்கள் சங்கம்

வடசென்னை - எண்ணூர்

No comments:

Post a Comment