புதிதாக...
இந்தியாவில் புதிதாக கரோனா தொற்று 20,799. உயிரிழப்பு 180.
இழப்பீடு
உ.பி.யில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு.
புதிய செயலி
தமிழ்நாட்டில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறையில் புதிய செயலி!
ஒருதலை ‘ராகம்'
குஜராத் மாநிலத்திற்கு மட்டும் மோடி அரசு 2019-2020 ஆம் ஆண்டுக்கு மட்டும் ரூ.11 ஆயிரத்து 659 கோடி ரூபாய் அளித்துள்ளது.
2015-2016 ஆம் ஆண்டு தரப்பட்ட நேரடி நிதியைவிட, 350 விழுக்காடு இது அதிகம்.
பா.ஜ.க. மாநிலம் என்றால், மோடி அரசுக்கு தனி ‘நியாயம்!'
- ஜி.இராமகிருஷ்ணன்,
பொலிட் பீரோ உறுப்பினர், சி.பி.எம்.
90 விழுக்காடு
கரோனாவால் இறந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி போடாதவர்கள்!
எச்சரிக்கை
டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தி செய்யும் இடங்களாகக் கண்டறியப்படும் வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரையும், அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 முதல் ரூ.5,000 வரையும் அபராதம் விதிக்கப்படும்.
70%
தமிழ்நாட்டில் இம்மாத இறுதிக்குள் 70 விழுக்காடு பேருக்குக் கரோனா தடுப்பூசி.
அசாக் கெலாட்
‘‘பிரதமர் மோடியிடம் ஒரு வேண்டுகோள். மகாத்மா காந்தியை ஏற்றுக் கொண்டால், அவரது அகிம்சை, உண்மை, மதச்சார்பின்மைக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
- அசோக் கெலாட், முதலமைச்சர், ராஜஸ்தான்.
டெங்கு
தமிழ்நாட்டில் நாள்தோறும் டெங்கால் 20 பேர் பாதிப்பு.
அடையாளம் காண்பீர்!
‘‘இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே என்னை இலங்கை வருமாறு அழைத்துள்ளார். நவராத்திரி பண்டிகையை என்னையும் அவரின் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தில் தேசிய பாதுகாப்புப்பற்றியும் உரையாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.''
- சு.சாமி
No comments:
Post a Comment