ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மூத்த வழக்குரைஞர்கள் முன்வர வேண்டும் : குடியரசுத் தலைவர் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 4, 2021

ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மூத்த வழக்குரைஞர்கள் முன்வர வேண்டும் : குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

புதுடில்லி, அக். 4- ஏழை களுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மூத்த வழக்குரைஞர்கள் முன் வர வேண்டும் என குடி யரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள் ளார்.

தேசிய சட்ட உதவிகள் ஆணையத்தின் சட்ட விழிப்பு குறித்த 6 வார பிரசார தொடக்கவிழா டில்லி விஞ்ஞான பவனில் 2.10.2021 அன்று நடை பெற்றது. அதில் குடியர சுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பேசியதாவது:-

உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் வழக்கு ரைஞர்கள் தங்களின் சிறிது நேரத்தை ஒதுக்கி, ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க முன் வர வேண்டும். காந்தி யாரின் கொள்கைகள் சட்டத்துறையினருக்கு இன்றும் பொருந்துவதாக உள்ளன. எளிய மக்களுக் கும் நியாயம் கிடைக்கும் வகையில் சேவைகளை அளித்துவரும் தேசிய சட்ட உதவிகள் ஆணை யத்தின் பணிகள் பாராட் டுக்குரியவை. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment