ஒன்றிய பாஜக அமைச்சரின் மகன்மீது கொலை வழக்குப் பதிவு
லக்னோ, அக்.4- உத்தரப் பிரதேசத்தில், வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அமைச்சரின் கார் மோதி விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரின் மகன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று (3.10.2021) ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் காரில் சென்றபோது விவசாயிகள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்துள்ளனர்.
அப்போது விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோச் சார் அமைப்பினர் தெரிவித்துள் ளனர்.
இந்தச் சம்பவத்தால் ஆத்திர மடைந்த விவசாயிகள் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை சேதப்படுத்தியதாக வும், காரை தீயிட்டுக் கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் லக்கிம்பூரில் வன்முறை வெடித்தது. காவல்துறையினர் கூட்டத்தை தடியடி நடத்திக் கலைத்தனர். வன்முறைக் களமாக மாறிய லக்கிம்பூரில் கார் மோதி 4 விவசாயிகளும், தொடர்ந்து நடைபெற வன்முறை மோதலில் 4 பேரும் என மொத்தம் 8 பேர் பலியாகினர்.
அமைச்சர் மகனின்மீது கொலை வழக்கு
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ் ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதற்கிடையில் நடந்த சம்பவத் துக்கும் தனது மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித் துள்ள பேட்டியில், "சம்பவ இடத்தில் எனது மகன் இல்லவே இல்லை. அங்கிருந்த சில சமூக விரோதிகளான போராட்டக்காரர்களே கத்தி, கம்பு கொண்டு தாக்கியுள்ளனர். என் மகன் மட்டும் அங்கிருந்திருந்தால் நிச்சயமாக உயிருடன் திரும்பியிருக்க மாட்டார். எனது மகன் துணை முதலமைச்சர் நிகழ்ச்சியில் இருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் தான் இருந்தேன்" என்று கூறியுள்ளார்.
லக்கிம்பூர் சம்பவம் குறித்து நீதி விசா ரணைக்கு உத்தரவிடப் பட வேண்டும் என்று உ.பி. முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் கைது
இந்நிலையில், வன்முறை நடை பெற்ற பன்வீர்பூருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செல்வதாக இருந்தது. இதற்காக, அவர் லக்னோவில் இருந்து இன்று (4.10.2021) அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்றார். ஆனால், பிரியங்கா காந்தியை பன்வீர்பூர் கிராமத்திற்குள் நுழைய காவல்துறையினர் அனுமதிக்க வில்லை. அவரை கிராம எல்லையிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மேலும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment