பஹ்ரைன், அக். 4- வளைகுடா நாடான பஹ்ரைன் நாட்டில், கடந்த வெள்ளிக் கிழமை (அக்டோபர் 1ஆம் தேதி) மாலை 6 மணிக்கு கலைஞர் அரங்கில் பஹ்ரைன் திமுக சார்பில் முப்பெரும் விழா, சட்டமன்றத் தேர்தல் வெற்றி விழா மற்றும் கலைக்கோட்டம் நூல் அறிமுக விழா என "அய்ம்பெரும்" விழா வாக கொண்டாடப்பட்டது.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங் கிய நிகழ்ச்சிக்கு பஹ்ரைன் திமுக வின் ஆலோசகர் அப்துல் கபூர் அவர்கள் தலைமை வகிக்க, ஆலோசகர் கருணா நிதி சண்முகம் முன்னிலை வகித்தார். முதன்மைச் செயலாளர் முத்துசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். கலை, இலக்கியச் செயலாளர் நாஞ்சில் பஷீர் சிறப்புரையாற்றினார்.
கலைக்கோட்டம் நூலை பாரதி, தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் முகமது உசைன் மாலிம் அவர்கள் அறிமுகம் செய்து வைக்க, தமிழ்க் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டியன் பெற்றுக்கொண்டார். பஹ்ரைன் திமுக வின் ஆலோசகர் கபீர் அகமது நூல் பற்றிய ஆய்வுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் தமி ழர்களுக்கான தனி அமைச்சகம் அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்க ளுக்கு நன்றி தெரிவித்து பொருளாளர் மேலப்பூந்தை இஸ்மாயில் , குடைந்தை ஆ.மு.ஆரிப், தீப்பொறி செல்லப்பா ஆகியோர் பேசினார்கள்.
நிகழ்ச்சியில், திராவிடர் கழகம் சார் பில் சிவகுமார், மதிமுக சார்பில் அவைத் தலைவர்ருத்திரமூர்த்தி, காங்கிரஸ் சார் பில் மைக்கல் நேவிஸ், தமுமுக சார்பில் மண்டலத் தலைவர் யூசுப் ராஜகிரி, வி.சி.க. சார்பில் இர்ஷாத், மஜக சார்பில் மன்னை அலி, முத்துத்தீவு தமிழ்ச் சங்கம் சார்பில் பைசல் மற்றும் பஹ் ரைன் திமுக நிர்வாகிகளான பொய்கை சிங்கமுத்து, கறம்பயம் செந்தில், அக்பர், இஸ்மத், அசோக் குமார், கவிஞர் ஆரூர் ஜமால், கவிஞர் இ.பி இஸ்மாயில், முத்துசிவன், தக்கலை சாம், ஆழியூர் சாகுல், பாண்டியன், வெற்றி, அப்துல் ஜப்பார், செந்தில் குமார், நூர் முஹம் மது, ஆகாஸ் நவீன் மற்றும் பலர் பங் கேற்றனர். மேலும்,நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச் சகம் அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுல்தான் இப்ராஹிம் தொகுத்து வழங்க, வெள்ளூர் சின்னசாமி நன்றி யுரை நிகழ்த்தினார்
No comments:
Post a Comment