மும்பை, அக். 30- உள்நாட்டில் பயணம் செய்ய விரும்புவோரின் எண் ணிக்கை 290 சதவீதம் அதிகரித் திருப்பதாக இந்தியாவின் முன்னணி பயண சேவை நிறுவனமான தாமஸ் குக் (இந்தியா) நிறுவனம் தெரிவித்துள்ளது.
18 மாதகட்டுப்பாடுகளுக்குப்பின், மாநில எல்லைகள் திறக்கப்பட்டது மற்றும் தடுப்பூசி போடுதல் போன்ற நேர்மறையான நடவடிக்கைகள் காரணமாக மக்களிடையே பயணம் மேற்கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. இது ஊரடங்கு தளர்த்தப்பட்ட ஜூன் மாதத்தில் இருந்து மாதந்தோறும் அதிகரித்து தற்போது 68 சதவீதமாக உயர்ந்து உள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் விழாக்கள் மற்றும் குளிர் காலம் மற்றும் “எக்ஸ்போ 2020 துபாய்” ஆகியவற்றின் காரண மாக தொற்று நோய்க்கு முந்தைய நிலையில் 55 சதவீதத்தில் இருந்து மீண்டு வருகிறது. இது உள்நாட்டு பயணத்தில் 290 சதவீதமாகவும் பன்னாட்டு பயணத்தை பொறுத்த வரை 60 சதவீதமாகவும் உயர்ந் துள்ளது. துபாய் எக்ஸ்போ 2020 காரணமாக தற்போது மாலத்தீவு, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், துருக்கி, எகிப்து, ரஷ்யா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகள் வாடிக்கை யாளர் களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களாக உள்ளன.
தாமஸ் குக் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது செயல் பாட்டை விரிவுபடுத்தும் விதமாக சென்னை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் 11க்கும் மேற்பட்ட சொந்தமான பயண ஏற்பாட்டு மய்யங்கள் மற்றும் முகவர்களைக் கொண்டுள்ளது.
தாமஸ் குக் இந்தியா நிறுவனம் ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்னும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் பன்னாட்டு நாடுகளின் குறிப்பிட்ட இடங்களுக்கு தங்களுடன் கூட ஒருவரை அழைத்துச் செல்லலாம். ஆரம்ப கால சலுகையாக 60 ஆயிரம் ரூபாய் செலுத்தி அய்ரோப்பாவின் குறிப்பிட்ட இடங்களுக்கு குடும்பத் துடன் சுற்றுலா செல்லலாம்; இந்தியாவில் சுற்றுலா செல்பவர் களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தாஜ் கூப்பன் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment