சென்னை, அக்.13 குழந்தைகள் காப்பகங்களின் தற்போதைய நிலை, அடிப்படை வசதிகள், நிர்வகிக்கும் நபர்கள் குறித்து அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத் தில் உள்ள தனியார் அறக் கட்டளையின் சார்பில் நடத் தப்பட்ட குழந்தைகள் காப்ப கத்தில் 24 ஆண் குழந்தைகளும், 25 பெண் குழந்தைகளும் எந்த வித அனுமதியும் பெறாமல் பராமரிக்கப் படுவதாக புகார் வந்தது. இதன் அடிப் படையில், காப்பகத்தை மூட அம்பத்தூர் வட்டாட்சியர் கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவு பிறப் பித்தார். இதை ரத்து செய்யக்கோரி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கை விசா ரித்த உயர்நீதிமன்றத்தில் காப்பகத் தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக் கும்படி திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதி காரிக்கு உத்தரவிட்டது.
குழந்தைகள் இல்லை
அதன்படி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த திரு வள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, காப்பகத் தில் தற்போது எந்த குழந்தையும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசார ணைக்கு வந்தபோது அதிகாரி யின் அறிக்கையை படித்து பார்த்தார். பின்னர் அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று உத்தர விட்டார். மேலும் உத்தர வில் அவர் கூறியிருப்பதாவது:-
குழந்தைகள் பாதுகாப்பு என் பது முக்கியமானது. எந்த சூழ் நிலையிலும் குழந்தைகளின் பாது காப்பில் அதிகாரிகள் சம ரசம் செய்துகொள்ளக்கூடாது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங் களின் தற் போதைய நிலை, அடிப்படை வசதிகள், நிர்வகிக் கும் நபர்கள் குறித்து அவ்வப் போது அதிகாரிகள் ஆய்வுகள் நடத்த வேண் டும். இதுபோல் உரிய கால இடைவெளியில் அதிகாரிகளால் முறையாக ஆய்வுகள் நடத்தப் பட்டு இருந் தால், அனுமதியின்றி குழந்தை களை காப்பகம் பரா மரித்து இருக்காது. இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக் கும். குழந்தைகள் நலனை கருத் தில் கொண்டு அரசுத்துறை அதிகாரி கள் உரிய நடவடிக்கை களை மேற் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment