சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு!

சிங்கப்பூர், அக்.29  சிங்கப்பூரில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரேநாளில் 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரசால் முதல் அலை உருவானது. அதனையடுத்து உருமாறிய கரோனா வைரஸ்கள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின.

 தீவிர கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு ஆகியவை மூலம் சில நாடுகள் வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கட்டுக்குள் வைத்து வருகின்றன.

இந்த சூழலில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் கரோனா பாதிப்பைப் பல காலமாகத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருந்தது.

முதலில் தீவிரமான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்த அந்நாட்டு அரசு, அதன் பிறகு பைசர் வேக்சினை கொண்டு தடுப்பூசி பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டில் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்த தால், அங்கு தினசரி பாதிப்பு முதல் முறையாக 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது. 

ஒரே நாளில் அங்கு மொத்தம் 5,324 பேருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.

அங்கு தினசரி கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.

வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள தாகவும் இதற்கான கார ணங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

தற்போது சிங்கப்பூர் நாட்டில் உள்ள அய்சியு படுக்கைகளில் மொத்தம் 79.8% இடங்கள் நிரம்பியுள்ளன.

இது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதேநேரம் வரும் காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தால் அதைச் சமாளிக்கும் வகையில் கூடுதலாக 100 அய்சியு படுக்கைகள் அடுத்த வாரம் தயாராகிவிடும் என சிங்கப்பூர் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கரோனா பாதிப்பைக் கட்டுப் படுத்துவதில் அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை என்பதால் தேவையான நடவடிக்கைகள்எடுக்கப்படும்

என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment