பாகிஸ்தானில் எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதல்; 8 வீரர்கள் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

பாகிஸ்தானில் எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதல்; 8 வீரர்கள் பலி

பெஷாவர், அக்.29 பாகிஸ்தானில் நடந்த எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதலில் 8 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 12 வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதலில் அந்நாட்டின் 8 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  பல்வேறு பகுதிகளிலும் குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபற்றி பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வேலி பகுதியில் இருந்து குர்ரம் மாவட்டத்திற்குள், ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள்  ஊடுருவ முயன்றனர் என தெரிவித்து உள்ளது. ராணுவம் பதிலடி கொடுத்து இதனை முறியடித்து உள்ளது.  இந்த சம்பவத்தில் 2 வீரர் கள் கொல்லப்பட்டனர்.  ரோந்து பணியில் 4  காவலர்கள் கொல்லப்பட்டனர்.  மற்றொரு சம்பவத்தில், வடக்கு வசீரிஸ்தானில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்.  ஒருவர் காயமடைந்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நவம்பர் 1 முதல் கட்டுப்பாடுகள் தளர்வு

கான்பெர்ரா, அக்.29 ஆஸ்திரேலியாவில் நவம்பர் 1 முதல் கட்டுப்பாடு தளர்வு காரணமாக ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மனித உயிர் பாதுகாப்பு நிர்ணய சட்டம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம், ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்வதை கட்டுப்படுத்தியது. தற்போது கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இந்த சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் தாராளமாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம்.

இது பற்றி அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் கிரேக் ஹண்ட் கூறும்போது,  ஆஸ்திரேலிய குடிமக்களும், நிரந்தர குடியுரிமை பெற்றவர்களும், வெளிநாடு செல்ல விரும்பினால் 2 தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை சிகிச்சை பொருட்கள் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். பயணத்துக்கு குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னதாக இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்  என்று குறிப்பிட்டார். தற்போது கரோனாவின் மூன்றாவது அலையில் உள்ள ஆஸ்திரேலியாவில்  ஒரே நாளில் 1,800 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 16 பேர் தொற்று பாதிப்பால் இறந்தும் உள்ளனர்.

No comments:

Post a Comment