சென்னை, அக்.29- நீதி பதிகள் நியமனம் தொடர் பாக பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான அனுமதி கோரிய மனுவை மீண்டும் விசா ரணைக்கு எடுக்கவுள்ளதாக அட்வ கேட் ஜெனரல் ஆர்.சண் முகசுந்தரம் தெரிவித்துள் ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி 'துக்ளக்' பத்திரிகையின் 51ஆவது ஆண்டு விழா வில் துக்ளக் பத்திரிக்கை யின் தற்போதைய ஆசி ரியர் குருமூர்த்தி பேசும் போது, உச்சநீதி மன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள்.
யார் மூலமாவது, யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக வந் துள்ளனர். இது வருத்தப் பட வேண்டிய விஷயம். ஊழல் செய்பவர் களை நீதிமன்றங்கள் தண்டிப் பது இல்லை. எனவே, தகுதியின் அடிப்படை யில் நீதிபதிகள் வந்தால் இதுபோன்று நடை பெறாது என்று பேசியிருந்தார். இதை கண் டித்து சென்னை உயர்நீதி மன்ற வழக் குரைஞர் எஸ். துரைசாமி அப்போ தைய அட்வகேட் ஜென ரல் விஜய் நாராயணிடம் மனு அளித்தார். அதில் 'துக்ளக்' பத்திரிக்கையின் 51ஆவது ஆண்டு விழா வில் நீதித் துறையையும் நீதிபதிகளையும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்திமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் தர வேண்டும் என்று கேட் டுக் கொண்டிருந் தார்.
ஆனால் அந்த மனுவை அப்போதைய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் நிரா கரித்து விட்டார். இந்த நிலையில், எனது மனுவை நிராகரித்து அட்வ கேட் ஜெனரல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தங்கள் தரப் பிடம் உரிய விசாரணை நடத்தப்படாமல் அந்த மனு நிராகரிக்கப்பட் டதாக வழக்குரைஞர் எஸ்.துரைசாமி தரப்பில் தெரிவிக் கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற அட்வ கேட் ஜெனரல் ஆர். சண்முகசுந் தரம், இதற்கு முன்பு இருந்த அட்வகேட் ஜெனரல் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக வும், வழக்குரைஞர் எஸ். துரை சாமியின் மனு மீது மீண்டும் நவம்பர் 11ஆம் தேதி விசாரணை நடத் தப்படும் என்று தமிழ் நாடு அட்வகேட் ஜென ரல் தகவல் தெரிவித்துள் ளார்.
இதற்கான கடிதத்தை வழக்குரைஞர் எஸ். துரை சாமி சார்பில் ஆஜ ராகும் வழக்குரைஞர் வி.இளங்கோவனுக்கு அட்வகேட் ஜெனரல் அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment