நாகப்பட்டினம், அக்.29 சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தில் ஃப்ரூடன்பெர்க் சுனாமியால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு அறக்கட்டளை மேற்கொண்டு வரும் இன்றியமையாத சேவைகளை பார்வையிட வருமாறு சென்னையில் உள்ள இந்தியாவிற்கான ஜெர்மன் துணைத் தூதரகத்தின் துணை தூதர் கரின் ஸ்டோல் அவர்களை, ஃப்ரூடன்பெர்க் அறக்கட்டளையின் அறங்காவலர் ஜார்ஜ் கிராஃப் அழைப்பு விடுதிருந்தார்.
சென்னையில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் கவுன்சில் ஜெனரலாக கடந்த 2018 ஜூலை முதல் ஸ்டோல் பணியாற்றி வருகிறார்.
ஸ்டோலின் இந்த மய்யப் பயணம், இந்தியாவில் உள்ள திறமைகளின் முழுமையான வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படும் இந்தோ-ஜெர்மன் உறுதிப்பாட்டைக் கோடிட்டுக் காட்டுகிறது. இப்பயிற்சி மய்யத்திற்கு தனது முதல் வருகை குறித்து பேசிய ஸ்டோல் கூறுகையில், இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் திறமையின் முழுமையான வளர்ச்சிக்கான பொதுவான பார்வையை ஜெர்மனியும் இந்தியாவும் பகிர்ந்து கொள்கின்றன. ஃப்ரூடன்பெர்க் பயிற்சி மய்யம், நாங்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த கூட்டுப் பார்வை மற்றும் இந்தியாவுடன் ஜெர்மனி வைத்திருக்கும் உறவின் வலுவான பிரதிபலிப்பாகும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த மய்யம் சுமார் 1000 இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் துறைகளில் பயிற்சி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment