பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்மட் நிறுவனம் தயாரித்த செயற்கை இதயத்தை வணிக ரீதியாக முதல் முறையாக இத்தாலியைச் சேர்ந்த ஒருவருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.
இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்ற இதய மாற்று அறுவைச் சிகிச்சையில் கார்மட் நிறுவனம் தயாரித்த செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. இதன் மூலம் செயற்கை இதயம் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் வர்த்தக ரீதியாக நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறுவைச் சிகிச்சைக்கு இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் ரூபாய் செலவானதாகவும், அதற்கான செலவை நேப்பிள்ஸ் மாகாண மருத்துவக் காப்பீட்டு திட் டத்தின் மூலம் வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மூளைச்சாவடைந்தவர்களின் உடலுறுப்புகளைப் பெற இனிமேல் காத்திருக்கத் தேவையில்லை என்ற நிலை உருவாகி உள்ளது, ஏற்கெனவே செயற்கை கிட்னி மற்றும் செயற்கை முதுகெலும்பு போன்றவை இறுதிச் சோதனையில் உள்ளன. இவை வெற்றியடையும் போது மனித வாழ்நாள் மேலும் அதிகரிக்கலாம்.
No comments:
Post a Comment