ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·  .பி. லக்கிம்பூர் விவசாயிகள் கொலை சம்பவம் பாஜகவை அரசியலில் தனிமைப்படுத்தி விட்டது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

தமிழ் நாட்டில் புதிதாக துவங்கப்படும் 11 மருத்துவக் கல்லூரிகளில் 800 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கு தமிழ் நாடு அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· உயர்ஜாதி அரியவகை ஏழைகளுக்கு அளிக்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்பதை எதன் அடிப்படையில் முடிவு செய்தீர்கள் என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· இந்தியாவில் வறுமையில் உள்ள ஆறு பேரில் அய்ந்து பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என அய்க்கிய நாடுகள் வளர்ச்சி குழுமம் நடத்திய ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

· தெலுங்கானா கிராமங்களில் பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்களின் எண்ணிக்கை 57 சதவீதம் என ஒன்றிய அரசின் புள்ளிவிவரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தி டெலிகிராப்:

· .பி. லக்கிம்பூர் விவசாயிகளை ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றிக் கொன்றதான வழக்கில் பிரதமர் மோடி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்..

- குடந்தை கருணா

No comments:

Post a Comment