சொந்தக்காசில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரதமர் படம் எதற்கு? நீதிமன்றத்தில் வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

சொந்தக்காசில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரதமர் படம் எதற்கு? நீதிமன்றத்தில் வழக்கு

திருவனந்தபுரம். அக் 15 அமெரிக்கா, இந்தோ னேசியா, இஸ்ரேல், குவைத், பிரான்ஸ், ஜெர் மனி ஆகிய நாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்கள் எதிலும் அந்நாட்டு அதிபர் அல் லது பிரதமரின் படம் இடம்பெறுவது இல்லை.

ஆனால், இந்தியாவில் 750 ரூபாய் செலுத்தி போட்டுக்கொண்ட தடுப்பூசிக்கு வழங்கும் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது ஏன்? என்று கேட்டு கேரள உயர்நீதி மன்றத்தில் பீட் டர் மியாலிபரம்பில் என் பவர் வழக்கு தொடர்ந் துள்ளார்.

இதற்கு ஆதாரமாக மேலே குறிப்பிட்ட நாடுகளில் வழங்கப்படும் சான்றிதழின் நகலை சமர்ப்பித்துள்ள அவர், ஒரு நபரின் மருத்துவப் பதிவேடு என்பது அவரது தனிப்பட்ட விவகாரம். அதில் அவரின் ஒப்புதல் இல்லாமல் அரசாங்கம் எதையும் பதிவிட முடி யாது என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவின் கோட் டயம் பகுதியைச் சேர்ந்த தகவலறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான பீட் டர் மியாலிபரம்பில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிய காரணத்தால், ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ரூ.750 பணம் செலுத்தி தனியார் மருத் துவமனையில் போட்டுக் கொண்டதாக கூறியுள் ளார். தான் பணம் கொடுத்து போட்டுக் கொண்ட தடுப்பூசி விவரம் அடங்கிய மருத்துவ சான்றி தழில் தனது ஒப்புதல் இல்லா மல் பிரதமர் மோடியின் ஒளிப்ப டத்தை பதிவிட்டு அதன் மூலம் அரசாங்கம் தனக்கு தடுப்பூசி போட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத் துவது ஏற்புடையது இல்லை என்று குறிப்பிட் டிருக்கிறார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.பி. சுரேஷ் குமார் இது குறித்து இரண்டு வாரங் களுக்குள் பதிலளிக்கு மாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு   தாக்கீது அனுப்ப உத்தரவிட் டார்.

No comments:

Post a Comment