லக்மிபூர் படுகொலையைக் கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

லக்மிபூர் படுகொலையைக் கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

புதுடில்லிஅக் 15 உத்தரப் பிரதேச மாநிலத்தில், லகிம்பூர் கேரி பகுதியில் கடந்த 3-ஆம் தேதி அரசு விழா ஒன்றுக்குமாநில துணை முதலமைச்சர் கேசவ் மவுரியா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு சாலையோரங் களில் விவசாயிகள் கருப் புக்கொடி போராட்டம் நடத்தி வந்தனர். அப் போது, ஒன்றிய அமைச் சரின் மகன் ஆசிஷ்மிஸ்ரா வந்த கார்விவசாயிகள் மீது மோடி தள்ளிவிட்டு சென்றது. இதையடுத்து அங்கு 4 விவசாயிகள் 4 பாஜகவினர், பத்திரிகை யாளர் ஒருவர் என மொத்தம் 9 பேர் பலியா கினர். விவசாயிகள் மீது காரை மோதியவர், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் என கூறப்படுகிறது. அவர் உச்சநீதிமன்ற எச்சரிக் கையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள் ளார். வன்முறையைத் தொடர்ந்து. லகிம்பூர் கெரி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கிசான் யூனியன் (BKU) தலைவர் ரஸ் கேஷ் திகாயத்,  லக்கிம்பூர் வன்முறைக்கு எதிராக அக்டோபர் 18 அன்று ஆறு மணிநேரம்ரயில் ரோக்கோபோராட்டம் நடைபெறும் என்றும், அக்டோபர் 26 அன்று லக்னோவில் ஒரு பெரிய கிசான் பஞ்சாயத்து நடைபெறும் என்றும் தெரிவித்துஉள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை வழக்கின் மீதான விசா ரணையில் திருப்தி யில்லை என்று கூறிய திகாயத், ஒன்றிய அமைச் சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷின்  சிவப்பு கம்பள வரவேற்புடன் கைது செய்யப்பட்டுள் ளார். இது  விவசாயி களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. ஆஷிஸ் மிஸ்ராவின் தந்தை, ஒன்றிய அமைச்சரான அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அப்படி இல் லையேல், குற்றம் சாட் டப்பட்ட நபரின் தந்தை தொடர்ந்து   நாற்காலியில் இருக்கும் வரை இந்த வழக்கில் நியாயமான விசார ணையை எதிர் பார்க்க  முடியாது என்று கண்டனம் தெரிவித் தார்.

No comments:

Post a Comment