புதுடில்லி, அக்.15 இங்கி லாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை இந்திய அரசு தளர்த்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட் டிற்கு வருபவர்களுக்கான பயண கட்டுப்பாடுகளை இங்கிலாந்து கடந்த மாதம் தளர்த்தியது. ஆனால், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகள் மட்டும் தொடர்ந்து வந்தது.
அதன்படி இந்தியா வில் இருந்து இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப் பட்டால் அவர்கள் சிகிச் சைக்கு செல்ல வேண்டும். கரோனா நெகட்டிவ் என முடிவு வந்தால் இந் திய பயணிகள் 7 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் மீண்டும் கரோனா பரி சோதனை செய்ய வேண்டும்.
மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி விவகாரத்திலும் இருநாடுகளுக்கும் இடையே கருத்துவேறு பாடு நிலவி வந்தது. இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் கரோனா தடுப்பூசியின் 2 டோஸ் களையும் செலுத்திக் கொண்டபோதும் 10 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்பட வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு இங்கிலாந் தில் இருந்து வரும் பயணி களுக்கு புதிய கட்டுப் பாடுகளை விதித்தது. அதன்படி, இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் இங்கிலந்து நாட்டினர் கரோனா தடுப்பூசி செலுத் திக்கொண்டுள்ள போதும் 10 நாள்கள் கட்டாய தனி மைப்படுத் தலை பின்பற்ற வேண்டும் எனவும், இந் தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் பயணம் மேற் கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் கரோனா பரி சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதல் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தியா வந்த உடன் இங்கிலாந்து பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப் படும். 10 நாள்கள் கட் டாய தனிமைப்படுத்த லின் போது 8ஆவது நாளில் 2ஆவது முறை யாக கரோனா பரிசோ தனை மேற்கொள்ளப் படும் என இந்திய அரசு கட்டுப்பாடுகளை விதித் தது.
இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி இங்கி லாந்து அரசு இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்தது. அதன்படி 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட இந்திய பயணிகள் 10 நாள்கள் கட்டாய தனி மையில் இருக்க வேண் டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந் திய அரசும் இங்கிலாந்து பயணிகளுக்கு விதிக்கப் பட்டிருந்த கட்டுப்பாடு களை தளர்த்தியுள்ளது. இதன்படி இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து பயணிகளுக்கான 10 நாள்கள் கட்டாய தனி மைப்படுததல் உத்தரவை இந்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. மேலும் பிப்ரவரி 17, 2021 அன்று அறிவிக்கப்பட்ட பன் னாட்டு பயணக்கட்டுப் பாட்டு விதிகள் இனி இங்கிலாந்து பயணிகளுக் கும் பொருந்தும் என இந்திய அரசு தெரிவித் துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment