ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு

ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ஜம்மு,அக்.8 ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது:-

காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. பண மதிப்பிழப்பு, சிறப்பு தகுதி ரத்து ஆகியவற்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்படவும் இல்லை, நிறுத்தப்படவும் இல்லை. இதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் ஒன்றிய அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்றார்.

No comments:

Post a Comment