பிணத்தின் மீது அமர்ந்து பூஜையாம்
திருச்சி,அக்.8- திருச்சி மாவட்டம், மணிகண்டம் பகுதியில் விபத்தில் இறந்த ஒருவரின் உடல் 5.10.2021 அன்று இறுதி சடங்கிற்காக திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி சிலையை அமைத்து வழிபாடு நடத்தி வரும் அகோரி மணிகண்டன் தலைமையில், சில அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு அங்கு வந்தனர்.
பின்னர் அகோரி மணிகண்டன், இறந்தவரின் பிணத்தின் மீது அமர்ந்து (ஏதேதோ மந்திரங்கள் ஓதி) இறந்தவரின் ‘ஆன்மா' சாந்தி அடைய இவ்வாறு சிறப்பு பூஜை செய்தாராம். அப்போது சக அகோரிகள் மேள தாளம் இசைத்தும், சங்கு ஊதியும் கூக்குரலிட்டனர்.
இதுபோன்ற விசித்திரமான, வெறித்தனமான பூஜைகள் வட மாநிலங்களில் மட்டுமே நடைபெறும். ஆனால், திருச்சி சுடுகாட்டில் இப்படி நடந்தது அப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, இதுபோன்று பிணத்தின் மீது அமர்ந்தும் மணிகண்டன் பூஜையில் ஈடுபட்டு உள்ளாராம்.
No comments:
Post a Comment