மாணவர்களின் தகுதியை பல கோணத்தில் கட்டமைக்க 'நீட்' தேர்வு தவறி விடுகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

மாணவர்களின் தகுதியை பல கோணத்தில் கட்டமைக்க 'நீட்' தேர்வு தவறி விடுகிறது!

பைசன் முஸ்தபா

(புதிய கல்விக் கொள்கையின் மிக உயர்ந்த லட்சியங்களை எட்டுவதற்கு, நாடு முழுமைக்கும் ஒரே தேர்வாக நீட் தேர்வு நடத்துவது என்ற ஒன்றிய அரசின் கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.)

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்கும் ஒரு சட்டத்தை தமிழ்நாட்டின் தி.மு.. அரசு இப்போது நிறைவேற்றி உள்ளது. பல்மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் உள்ளிட்ட அலோபதி மருத்துவக் கல்லூரிகளின் இளநிலைபட்ட வகுப்புகளில்   மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் நீட்தேர்வு எழுதுவதில் இருந்து இந்த சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது.

பல்வேறு நுழைவுத் தேர்வுகள் எழுதவேண்டிய கட்டாயமான அவசியத்தில் இருந்து நீட்தேர்வு மாணவர்களைக் காப்பாற்றுவது மட்டுமன்றி, மருத் துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஒரு வெளிப்படை யான, நியாயமான நடைமுறையாக இருப்பதை அது உறுதிப்படுத்தவும் செய்கிறது என்ற கருத்தை இந்திய உச்சநீதிமன்றத்தில் பல நீதிபதிகள் கொண்டிருக்கின் றனர்.  ஆனாலும், ஒரே தேசம்,  ஒரே தேர்வு  என்ற இந்த கொள்கை உண்மையிலேயே மாணவர்களை, குறிப்பாக கிராமப்புற மற்றும் வசதி வாய்ப்புகள் அற்ற சமூக மாணவர்களை,  எவ்வாறு பாதிக்கிறது என்பது முறையாக ஆய்வு செய்யப்படவில்லை. அது மட்டுமன்றி, சிறுபான்மை மத  கல்வி நிறுவனங்களின் உரிமைகளை அது எவ்வாறு மறுக்கிறது என்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இது போன்ற தேர்வுகள் நடத்தியதில் மற்ற நாடுகள் பெற்றிருக்கும் அனுபவங்கள் என்ன? கூட்டாட்சித் தத்துவத்தின் மீது இந்த ஒரே தேர்வுக் கொள்கை எத்தகைய பாதிப்புகளை உண்மையாக ஏற்படுத்தக் கூடும்?

புதுப்பிக்கப்பட்டதொரு விவாதம்

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் அளிக்கப்படுவதை மேம்படுத்துவோம் என்று தி.மு..வின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி .கே. ராஜன் அவர்கள் தலைமையில் நீட்தேர்வின் சாதக பாதகங்களைப் பற்றி ஆராய்வதற்காக ஓர் உயர்மட்டக்  குழுவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அமைத்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து  தமிழ்நாட்டு பா...வின் மாநிலச் செயலாளரால் பதிவு செய்யப் பட்ட ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தபிறகு,  மிகமிக வேகமாக செயல்பட்ட தி.மு.. அரசு, நீட் தேர்வுக்கு எதிரான ஒரு சட்டத்தை  தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டத்தை பா... எதிர்ப்பதால், இந்திய குடியரசுத் தலைவர் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் தராமல் மறுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

எனவே தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இந்த சட்டம் அதிகப்படியான நன்மைகள் எதையும் செய்துவிட முடியாது. என்றாலும் கூட, நீட்தேர்வின் பயன்பாட்டைப் பற்றி மற்றுமொரு விவாதத்தை மீண்டும் எழுப்புவதில் இந்த சட்டம் வெற்றி பெற் றுள்ளது. அரசமைப்பு சட்ட அட்டவணையில் ஒன்றிய, மாநில அரசுகள் கையாள இயன்ற துறை களின் பட்டியலில்  25 ஆவது பதிவை மருத்துவக் கல்வி பெற்றுள்ளது. அது ஒன்றிய அரசின் துறைப் பட்டியலின் 66 ஆவது பதிவின் கீழ் உயர்கல்வித் துறையின் தரத்தை உருவாக்கி பேணும் பொறுப்பு ஒன்றிய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்த போதிலும், இவ்வாறு தரத்தைப் பேணி வளர்க்கும் பொறுப்பு 2019 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றிய,  நீட் தேர்வை கட்டாயமாக ஆக்கிய   தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின் 14 ஆவது பிரிவின்படி ஒன்றிய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை எவர் ஒருவரும் பெற முடியாது என்ற வகையில் ஈடு இணையற்றதாக இருக்கும்  இந்த நீட் தேர்வின் மூலம் சேர்க்கை நடத்தும் நடைமுறை. வாஜ்பேயி அரசில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷிதான் பொதுத் தேர்வுகள் என்னும் இந்தக் கருத்தை முதன் முதலாக உருவாக்கியவர் ஆவார். டி.எம்.. பாய் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் இடையே 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இந்தக் கருத்துக்கு சிறிது ஆதரவு கிடைத்தது. ஆனாலும், 2013 ஆம் ஆண்டில்,  வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி நிர்வாக சங்கத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையேநடைபெற்ற வழக்கில், மூன்று நீதிபதிகளின் பெரும்பான்மை ஆதரவுடன் இந்த நீட் தேர்வு நடைமுறை தள்ளுபடி செய்யப்பட்டது.

நீட் தேர்வு நடைமுறை பணக்கார மாணவர் களுக்கும், பயிற்சி மய்யங்களுக்கும் ஆதரவாக இருப்பதாகவும், மாணவர்களுக்கு எதிரான அந்த நடைமுறை மருத்துவக் கல்வியின் தரத்தையே  தாழ்த்திவிடும் என்றும் கூறப்பட்டு இது பற்றி இந்த புதிய தேர்வு நடைமுறை பரவலாகக் கண்டிக்கப் பட்டது. அதனை அடுத்து 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில்  சேர்க்கப்பட்ட பிரிவு 10டியின் படி நீட் தேர்வை நடத்துவதற்கு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் அளித்தது. அத்துடன் உச்சநீதிமன்ற அமர்வின் இந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட சீராய்வு மனுவை 2016 இல்  ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், நீட் தேர்வை 2016 ஆம் ஆண்டு முதற்கொண்டே நடத்துவதற்கு தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு ஆணையிட்டது.

'நீட்' தேர்வு நடைமுறை நீதிமன்றத்தால் திணிக்கப்பட்டது

2016ஆம் ஆண்டில் மட்டுமாவது தங்களின் சொந்த நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்வதற்கு  மாநில அரசுகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்ட போதிலும், உச்சநீதிமன்றம் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தது மிகவும் வியப்பளிப்பதாக இருந்தது.

எனவே இந்த முறையில் நீட் தேர்வு நடைமுறை உச்சநீதிமன்றத்தால் திணிக்கப்பட்டதுதானே அன்றி நரேந்திர மோடி அரசினால் திணிக்கப்பட்டது அல்ல. இஸ்லாமிய கல்வி நிறுவனம் மற்றும்  இதரர்களுக்கும் 2003 ஆம் ஆண்டில் நடந்த வழக்கில் அளிக்கப்பட்ட தங்களின் தீர்ப்பின் மீது உச்சநீதிமன்றம் அதிககவனம் செலுத்த வில்லை என்பது மிகுந்தஆர்வமளிக்கும் ஒரு செய்தியாக இருப்பதாகும். டி..பாய் பவுன் டேஷனைப் பற்றி, அது சிறப்பு அம்சம் கொண்டது என்பதாலும், குறைந்தது கடந்த 25 ஆண்டுகளில் வெளிப்படையான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை மேற்கொண்ட நிறுவனம் என்பதாலும், பொது நுழைவுத் தேர்வில் இருந்து அந்த நிறுவனத்தின் மாணவர்களுக்கு விலக்கு கோரக்கூடும் என்று அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விளக்கம் அளித்தது.

நீட் தேர்வு நடைமுறை சிறுபான்மை மதக் கல்வி நிறுவனங்களுக்கும் கூட பொருந்தும் என்று 2020 ஆம் ஆண்டில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமை யிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்தது. தங்கள் விருப்பப்படி மாணவர்களை அவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் என்று அதன் 30 ஆவது பிரிவு உரிமை அளிக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கான உரிமைக்காக மட்டுமே அத்தகைய விருப்பத்தை வரையறை செய்ய முடியாது. ஒவ்வொரு பல்கலைக் கழகமும், கல்வி நிறுவனமும் சில சிறப்பான பாடப் பிரிவுகளை நடத்துவதற்கு உரிமை உள்ளவையாகும். எடுத்துக் காட்டாக, வார்தா சேவா கிராமில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி, தங்களது தேர்வுகளில் காந்தியைப் பற்றிய வினாத்தாள் ஒன்றையும் வைத்துள்ளதைக் குறிப்பிடலாம். அது போலவே ராணுவ வீரர்களுக்கான மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பு பற்றி பாடம் ஒன்றில் ஒரு தேர்வை நடத்துவதையும் கூட குறிப்பிடலாம்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே கேள்வித் தாள்கள் கசிந்தன என்பது பற்றிய புகார்கள் பலவும் எழுந்தன. நியாயமற்ற வழிகளில் மாணவர்கள் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டது பற்றி ஊடகங்கள் பரவலாக செய்திகளை வெளி யிட்டன. நியாயத் தன்மை, வெளிப்படைத் தன்மை என்ற அளவுகோல்களை நிறைவு செய்து கொள்வதற்கு நீட் மற்றும் ஜீ தேர்வுகள் தவறே நடைபெற இயலாத தேர்வு நடை முறைகள் அல்ல என்பதற்கு இந்த நிகழ்வுகள் சரியான சான்றுகளாகும்.

நீட் தேர்வு நடைமுறைக்கு பிந்தைய பாதிப்புகள் பற்றிய புள்ளிவிவரங்கள் ஒரே ஒரு பொது நுழைவுத் தேர்வுக்கு எதிரான வாதங்களைத் தனது 165 பக்க அறிக்கையில் .கே.ராஜன் நிலை நாட்டியுள்ளார். இந்தக் குழு பேசிய 86, 342 பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள் நீட் தேர்வு நடை முறையை எதிர்த்துள்ளனர்.

நீட் தேர்வு நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு,  மருத்துவக் கல்லூரிகளில் நிலவிய பன்முகத் தன்மை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் இருந்து மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்லும்  மாணவர்களின் எண்ணிக்கை 61 . 45 சதவிகிதத்தில் இருந்து 50 . 81 சதவிகிதத்திற்குக் குறைந்துவிட்டது. அதே போல அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவக் கல்வி பயிலச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 1.12 சதகிவிதத்தில் இருந்து 0.6 சதவிகிதமாகக் குறைந்து விட்டது.

ஆங்கில மொழி வழிக் கல்வி பயின்ற மாணவர்களின் சதவிகிதம் ஏற்கெனவே மருத்துவக் கல்வியில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. அது இப்போது 85 . 12 சதவிகிதத்தில் இருந்து 98 . 01 சதவிகித அளவுக்கு உயர்ந்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்விக் குழும (சிபிஎஸ்சி) பள்ளிகளில் இருந்து மருத்துவக் கல்வி பயில வருபவர்களின் எண்ணிக்கை                 38.34 சதவிகித அளவுக்கு உயர்ந்துள்ளது. பொருளா தார நிலையில் பின்தங்கியுள்ள மாணவர்களில் இருந்து மருத்துவக் கல்வி பயிலச் செல்பவர்களின் எண்ணிக்கை 47.42 சதவிகிதத்தில் இருந்து 41.05 சதவிகித அளவுக்குக் குறைந்து விட்டது.

நீட் தேர்வு நடைமுறை சட்டத்தின், சட்டப்படி செல்லும் தன்மையை மட்டுமே பார்த்த உச்சநீதி மன்றம், களநிலையில், குறிப்பாக வாய்ப்பு மறுக்கப் பட்ட ஏழை மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மதக் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களின் மீது நீட் தேர்வு நடைமுறை ஏற்படுத்தியுள்ள பாதிப்பு களையும் காணத் தவறிவிட்டது. மிகப் பெரிய அள வில் பிராந்திய பாகுபாடுகளைக் கொண்ட இந்தியா வையும்,  பல்வேறுபட்ட மாநிலக் கல்வி குழுமங் களினால் அளிக்கப்படும் கல்வியில்  குறிப்பாகக் காணப்படும் வேறுபாடுகளையும் மறந்துவிடுங்கள். அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வு களில் இருந்து, மிகமிகப் பெரிய பணக்காரர்களின் குழந்தைகளும், அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் குழந்தைகளும்தான் இத்தகைய போட்டி நுழைவுத் தேர்வுகளில் அதிக அளவில்  தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், இத்தகைய போட்டித் தேர்வுகள் ஏழை களுக்கும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவு மக் களுக்கும், பெண்களுக்கும் மற்றும் சிறுபான்மை மத மக்களுக்கும் எதிராக பாகுபாடு கொண்ட கண் ணோட்டத்திலேயே நடத்தப்படுகின்றன என்றும் தெரிய வருகிறது. இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்ப்பதற்காக, இன உணர்வு கொண்ட  மாணவர் சேர்க்கைத் தகுதி நிபந்தனைகள் மற்றும் அளவுகோல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறு,  நீட் தேர்வு நடைமுறையில் வர்க்கப் பிரிவு என்ற கூறு ஒன்றும் இருக்கிறது. அவ்வாறு பாகுபாடு காட்டப் படுவதற்கான பலமான ஆதாரங்களை நீதிபதி .கே.ராஜன் குழு கண்டுபிடித்து தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் ஒரே ஒரு போட்டித் தேர்வு நடைபெறுவதால்,  வியாபார நோக்கில் செயல்படும் தனியார் பயிற்சி மய்யங்கள் பெரும் பொருள் ஈட்டுவதற்கு ஏற்ற வாய்ப்பும் வசதிகளும் உள்ளன. மேலும் அது போன்ற பயிற்சி மய்யங்கள் பல் இன மக்கள் வாழும் பெருநகரங்களிலும், மாநகரங்களிலும்  மட்டுமே உள்ளன. இந்த ஒரே தேசம் ஒரே தேர்வு கொள்கையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் கிராமப்புறப் பின்னணியில் இருந்து வரும் ஏழை மாணவர்களும், தாய்மொழி வழிக் கல்வி கற்ற மாணவர்களும்தான். இடைநிலைக் கல்விக் கழகத்தின் பாடத் திட்டத்திற்கும், மாநில இடைநிலைக் கல்வி கழகங்களின் பாடத் திட்டத்திற்கும் இடையே மிகப் பெரிய அளவிலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழ் வினாத் தாள்களில் சேர்க்கப் பட்ட தவறான மொழி மாற்றக் கேள்விகளும் ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகும்.

நீட் என்னும் ஒரே ஒரு தேர்வின் அடிப்படையில் சமமற்றவர்கள் சோதனை செய்யப்படும்போது,  அரசமைப்பு சட்ட 14 ஆவது பிரிவில் உறுதி அளிக்கப்பட்டுள்ள சமத்துவ உரிமை மீறப்படுகிறது. இந்த சட்டப் பிரிவின்படி,  ஒன்று போலவே இருப்பவர்கள் அனைவரும் ஒன்று போலவே நடத்தப்பட வேண்டுமே அன்றி, ஒன்று போல் இல்லாதவர்கள் ஒன்று போல் இருப்பவர்களாக நடத்தப்படக் கூடாது. எனவே, இந்தநீட் நடைமுறை அரசமைப்பு சட்டத்தின் முன்னுரைக்கு எதிராக இருப்பதாகும். அனைவருக்கும் அது சமமான வாய்ப்புகளை அளிப்பதில்லை. அதனால் அடிப்படை சமத்துவத்திற்கு பதிலாக அடிப்படையில் சாதிக்கப் படுவது என்னவோ சாதாரணமானதுதான். தரத்தை மேம்படுத்துவது பற்றிய  நீதித்துறையின் நம்பிக்கையே நீட் தேர்வு நடைமுறைக்கு கிடைத்துள்ள  மிகப் பெரிய ஆதரவும் வாதமும் ஆகும். ஆனால் தரம் என்பதைப் பற்றிய அர்த்தத்தில்  எந்த விதத் தெளிவும் அவர்களது வாதத்தில் காணப்படவில்லை. நீட் தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் கூட,  தாழ்த்தப்பட்ட பிரிவு, பழங்குடியின பிரிவு மற்றும் இதர பிற்படுத் தப்பட்டோர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பெற்ற மதிப்பெண்களை விட மிகமிகக் குறைந்த மதிப் பெண்களைப் பெற்ற வெளிநாடுகளில் வாழும் இந்தி யர்களில் இருந்தும், நிர்வாகத்துக்காக ஒதுக்கப்பட்ட இடங்களிலும் சேர்க்கப்படுகின்றனர் என்பதுதான் நாட்டில் நிலவும் உண்மையான நிலை  ஆகும்.

தரநிர்ணயம் செய்யப்படுவதற்கு நியாயமான போட்டியும், சம வாய்ப்புகள் அளிக்கப்படுவதும் இன்றியமையாதவை ஆகும். தரம் என்னும் பல கோண கட்டமைப்பை மிகச் சரியாக அளவிடப்பட இயலாது விட்டாலும், போதுமான அளவிலாவது அளவிடப்பட முடியும் என்று ஒன்றிய அரசும், நீதிபதிகளும் உண்மையாகவே நம்புகின்றனர் என்பது ஓர் பேருண்மை அல்லவா? இந்த அடிப்படை அளவுகோல்களையும், நிபந்தனைகளையும் நிறைவு செய்ய நீட் தேர்வு நடைமுறையால் முடியாதபோது, போட்டி என்பது நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதாகக் கருத இயலாது; சம வாய்ப்பு அளிக்கப்படுவது என்ற கோட்பாடும் கானல் நீராகிவிடுகிறது.

கற்பனை, பேரவா, சாதனைக்குத் தூண்டுதல் அளித்தல், போன்றவற்றைக் கற்றுக் கொள்வதற்குத் தேவையான ஆற்றல்களை பொது நுழைவுத் தேர்வு களால் அளவிடப்பட முடியாது. ஒரு மருத்துவரிடம் பெற்றிருக்க வேண்டிய பரிவு, கருணை, மனித இனத்துக்கு சேவை செய்வதற்கான பேராவல் ஆகிய குணங்களை நீட் தேர்வு நடைமுறையால் சோதிக்க முடியாது. மேலும் எந்த ஒரு மருத்துவரும் கிராமப்புறப் பகுதிகளில் பணியாற்ற விரும்புவதில்லை. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவராக பயிற்சி பெற்றவர் உண்மையில் நல்ல மருத்துவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமோ, கட்டாயமோ இல்லை.

தங்களது பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு மிகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வுக்கான பாட திட்டம் ஒன்றிய இடைநிலைக் கல்விக் குழுமத்தின் பாடத் திட்டமாக இருக்கக்கூடாது. நமது மருத்துவ நிறுவனங்களில்  சமூகத்தின் பன்முகத் தன்மை எதிரொலிக்கக் கூடிய அளவிலும்,  புதிய கல்விக் கொள்கையின் இலக்குகளான சமத்துவம், நாட்டின் வளம் மற்றும் முன்னேற்றத்தின் பயன்களைப் பெறு வதில் அனைத்து மக்களையும் சேர்த்துக் கொண்டு செல்வது, அனைத்து வாய்ப்புகளும், அனைவருக்கும் கிடைக்கச் செய்வது ஆகியவை நிறைவேற்றப்படு கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஒரே தேர்வான நீட் தேர்வை நடத்தும் முடிவை ஒன்றிய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்.

நன்றி: 'தி இந்து ' 29-09-2021

               தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment