சரும புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

சரும புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை

சூரியனின் புற ஊதாக்கதிர்கள், நாள்பட்ட தழும்பு மற்றும் ஆர்செனிக் (வேதியியல் மூலம்) ஆகியவை சரும புற்றுநோயை விளைவிக்கக்கூடும். இந்த சரும புற்றுநோய் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களை பாதிக்கிறது. பொதுவாக சரும புற்றுநோய்கள் மெலனோமா மற்றும் நான்-மெலனோமா என இருபெரும் வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. சரும புற்றுநோய்க்கான பல்வேறு சிகிச்சைகளுள் அறுவைசிகிச்சையின் மூலம் அதை வெட்டி அகற்றுவதும் உள்ளடங்கும். இதில் அறுவைசிகிச்சையின் மூலம் நைவுப்புண் என்ற பாதிக்கப்பட்ட பகுதி அகற்றப்படுகிறது.

தேவைப்படுமானால் சரும மடிப்பின் மூலமும் அந்த குறைபாடு மூடி மறைக்கப்படுகிறது. இதில் அறுவைசிகிச்சைக்குப் பதிலாக கதிர்வீச்சு சிகிச்சையானது புற்றுநோய் பாதிப்புள்ள பகுதியில் புற்றுக்கட்டியை குணப்படுத்துவதற்காக தரப்படுகிறது. சூரிய ஒளிக்கு நேரடியாக ஆட்படாமல் குறைப்பதன் வழியாக சரும புற்றுநோய்கள் வராமல் தடுக்க முடியும். சருமவியல் ரீதியாக பரிந்துரைக்கப்படுகிற சன் ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்துமாறுஎப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

ஏற்கனவே இருக்கிற மருவில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது புதிய மருக்கள் தோன்றுமானால், புற்றுநோய்க்கான சாத்தியமின்மையை உறுதிசெய்ய ஒரு புற்றுநோயியல் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கவும். எவ்வளவு விரைவில் இது கண்டறியப்படுகிறதோ அந்தளவு அதனால் வரும் சிக்கல்களும் குறைவாக இருக்கும். புற்றுநோய்க்கான சிகிச்சைகள் கடந்த பத்தாண்டுகளில் புதிய முறையியல்களை பின்பற்றுதல், நவீன தொழில்நுட்பம் மற்றும் உயர் துல்லியம் ஆகிய அம்சங்களினால் அதிக வளர்ச்சி பெற்றிருக்கிறது. சரும புற்றுநோய்க்கு தரப்படும் சிகிச்சையில் வெற்றி விகிதம் என்பது 95% ஆக இருக்கிறது என்பது நம்பிக்கை தரும் செய்தி!

No comments:

Post a Comment