மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதி உடல்நிலை சீராக உள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதி உடல்நிலை சீராக உள்ளது

எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

புதுடில்லி, அக்.14 மேனாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல் நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.  அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவ ருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய மக்கள் விரும்புவதாக காங்கிரஸ் கட்சித் தலைமை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட் டுள்ளது. அவரது உடல்நலம் பெற விழைவதாக பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மன்மோகன்சிங்கின் உடல்நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது உடல்நலம் சீராக உள்ளது என்றும் அவருக்கு வழக்கமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன் மோகன்சிங் கடந்து ஏப்ரல் மாதம் கரோ னாவால் பாதிக்கப்பட்டு, 10 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment