மதுரை, அக்.14-தமிழ் நாட்டில் முதன் முறையாக மதுரை மாவட்டம், ஒத்தக் கடை ராஜ கம்பீரத்தில் உள்ள பதி வுத்துறை அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாமை, வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி 12.10.2021 அன்று துவக்கி வைத்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் அவர் பேசியதாவது:
முதலமைச்சரின்
உத்தர வின்படி 50 மாவட்டங்களில் உள்ள பத்திர பதிவுத் துறையிலும், சார்பதிவா ளர் அலுவலகங் களிலும் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை பதிவுத் துறையின் குறைதீர்க்கும் முகாம் கூட்டம் அக்.11 முதல் நடக்கிறது. மனுதாரரின் மனுக்களை பெற்று, உடனடியாக தீர்வு காணும் வகையில் தமிழகத்தில் முதன் முதலாக, மதுரை மாவட்டத்தில் திருமா கூர் ஊராட்சிக்குட்பட்ட 5 சார்பதி வாளர் அலுவலகத்தின் சார்பில் இம் முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் எளிமையாக பதிவதற்கு ஏற்றமுறையில் பல்வேறு மாற்றங்களை முதலமைச்சர் பத்திரப் பதிவுத் துறையில் செயல்படுத்தி வரு கிறார். மேலும், இத்துறையில் உள்ள குறைகளை சரி செய்ய குறை தீர் முகாம் தமிழ்நாடு முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்படுகிறது.
பொதுமக்களிடமிருந்து
வரப்பெற்ற மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் நட வடிக்கை மேற்கொண்டு
தீர்வு காணப் படும். வில்லங்கம் சம்பந் தமான மனுக் களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப் படும். தமிழ்நாடு முழுவதும் 575 சார்பதி வாளர் அலுவலகங்கள் உள்ளன. மக்க ளின் குறைபாடுகளை சரி செய் வதற்காக மேலும் 50 சார்பதிவாளர் அலுவலகங்கள் கூடுவதற்கான வாய்ப்பு கள் இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் பிறக்கப்பட்டு பல ஆண்டு காலம்
ஆகிறது. அப்பகுதியில் இருக்கக் கூடிய 15 ஊராட்சிகள் இது வரை மதுரை வடக்கு தாலுகாவிற் குட்பட்டு இருந்தது. தற்போது திருப் புவனம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment