அறந்தாங்கி கழக மாவட்டத்தில் தந்தை பெரியார் 143ஆவது பிறந்தநாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

அறந்தாங்கி கழக மாவட்டத்தில் தந்தை பெரியார் 143ஆவது பிறந்தநாள் விழா

அறந்தாங்கி,அக்.14- அறந்தாங்கி கழக மாவட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது  பிறந்தநாள் விழா, எழுச்சியோடு நடைபெற்றது.

மண்டல இளைஞரணி செயலாளர் .வீரையா  இல்லத்தில், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் மகாராசா தலைமை ஏற்க, பெரியார் பிஞ்சுகள் செம்மகிழன் பண்பாளன் இருவரும் கழகக் கொடியினை ஏற்றி வைத்தனர். அனைவரும் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

 தொடர்ந்து நெய்வத்தளி கிளைக் கழகத்தின் சார்பாக நெய்வத்தளி கடைவீதியில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில், மண்டல இளை ஞரணி செயலாளர், வீரையா தலைமையில், மகளிர் அணி தோழியர், ஆசிரியர் டார்வி கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.

பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் மகாராசா, கட்டடவியல் பொறியாளர் திராவிட நளன் பெரியார் பிஞ்சுகள் செம்மகிழன், பண்பாளன் மற்றும் பலர் பங்கேற்க சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

பெரியார் சிலைக்கு அனைத்துக் கட்சியினர் மாலை

தொடர்ந்து அறந்தாங்கியில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு, மண்டல தலைவர் ராவணன் தலைமை ஏற்க, மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் மகராசா, மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா. யோகராசு, நகர தலைவர் சுப்பிரமணியன், நகர செயலாளர் உண்மை பாலு, திருவரங்குளம் ஒன்றிய தலைவர் தேவேந்திரன், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழகம் .வேல்சாமி, பெரியார் பிஞ்சுகள், செம்மகிழன் பண்பாளன் ஆகியோர் பங்கேற்க, மண்டல இளைஞரணி செயலாளர் வீரையா பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பலர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அனைவரும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்

டனர். மாவட்டத் தலைவர் மாரிமுத்து இல்லத்தில் மகளிர் அணி தோழர் மாமலர்  கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் கழகக் கொடியினை மாவட்ட தலைவர் மாரிமுத்து ஏற்றி வைத்தார். 

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லையும் தஞ்சை மாவட்டத்தின் எல்லையுமான புளிச்சங்காடு கைகாட்டியில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சி மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கீளாத்தூரில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், தந்தை பெரியாரின் சிலைக்கு கழகப்பேச்சாளர், மாங்காடு சுப.மணியரசன் தலைமையில், மாலை அணிவித்து, சமூகநீதி உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்

பட்டது.

புதுக்கோட்டை விடுதியில் அமைந்துள்ள, தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு புதுக்கோட்டை மண்டல  கழகத் தலைவர்,  பெ. இராவணன் தலைமையில் மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கந்தர்வக்கோட்டையில், இளைஞர் அணி பொறுப்பாளர்கள், காரல் மார்க்ஸ், குட்டி வீரமணி ஆகியோர் முயற்சியினால், தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து, சமூகநீதி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

புதிய கிளை தொடக்கம்

மணமேல்குடி பகுதியில் இயக்கத்திற்கு புதிய வரவாக கிடைத்த தோழியர் லாவண்யா  முயற்சியினால், மணமேல்குடி கடைவீதியில் கழகக் கொடியை ஏற்றுவதற்கான முயற்சிகள், பெரியார் பெருந் தொண்டர்கள் சிவசாமி, நாகூரான் ஆகியோரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில்  புதுக்கோட்டை மண்டல  கழகத் தலைவர் பெ.இராவணன் தலைமை ஏற்க, பகுத்தறிவாளர் கழகத்தின் சீரிய செயல்பாட்டாளர் வேல்சாமி கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து லாவண்யா அவர்களின் இல்லத்தில், புதிய கிளை தொடக்க விழா மண்டல தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் மகாராசா, மண்டல இளைஞரணி செயலாளர் வீரையா பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் வேல்சாமி. நாகூரான், சிவசாமி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

புதிய பொறுப்பாளர்கள் ராம் சுந்தர், ஆனந்த், லட்சுமணன், ராமச்சந்திரன், சுவாமிநாதன், யுவராஜ் ஆகியோர் நிர்வாகத்தில், மணமேல்குடி, ஏகணிவயல் பகுதிகளில் இயக்கப்பணி தொடங்கி சிறப்பாக நடைபெறுகிறது.


No comments:

Post a Comment