"உறக்க நலன் காக்கும் படுக்கை!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

"உறக்க நலன் காக்கும் படுக்கை!"

உடற்பயிற்சிக்கு பலவகை கருவிகள் வந்துவிட்டன. ஆனால், உறக்கத்திற்கு அப்படி எதுவும் கருவிகள் இல்லை. இருப்பதெல்லாம் படுக்கைதான். எனவே, படுக்கையையே அதிஉயர் தொழில்நுட்பக் கருவியாக ஆக்கியிருக்கிறது 'எய்ட் ஸ்லீப்'. சராசரியாக மனிதனுக்கு எட்டுமணி நேர உறக்கம் தேவை என்ற அறிவியல் உண்மையின் அடிப்படையில் வைக்கப்பட்ட பெயர் இது.

எய்ட் ஸ்லீப், ஒரு புத்திசாலிப் படுக்கை. இதில் ஆறு அடுக்குகள் உண்டு. அதில் ஒன்று நீரை அடைத்திருக்கக்கூடியது. படுக்கையை வெதுவெதுப்பாக அல்லது குளிர்ச்சியாக வைத்திருக்க ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உதவுகிறது. படுத்திருப்பவரின் உடல்வாகிற்கு ஏற்ப படுக்கையை மாற்றுகிறது.

இந்தப் படுக்கையில் படுப்பவர், 40 சதவீதம் சீக்கிரமே தூங்குவார். அதேபோல, இடையில் விழிப்பது 30 சதவீதம் குறையும். புரண்டு படுப்பதும் 30 சதவீதம் குறையும். எப்படியும், எய்ட் ஸ்லீப் படுக்கை, நிம்மதியான துக்கத்திற்கு வழிவகுக்கும் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.

No comments:

Post a Comment