இதய
மாற்று அறுவை சிகிச்சையில் இன்னும் தீர்க்கப்படாத சிக்கல் இது. மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை, தொலை தூரத்தில் உள்ள இன்னொரு இதய நோயாளிக்குப் பொருத்த முடிவதில்லை.
காரணம்,
மனித இதயம் சில மணி நேரத்திற்குள் துடிப்பை நிறுத்திவிடுவது தான்.இந்த நேரத்தை நீட்டிக்க, இதயத்தை உறைய வைக்கும் முறை உதவும். ஆனால் அதிக நேரம் உறைந்திருக்கும் இதயத்தின் தசைக்குள் பனிக்கட்டி உருவாகி, இதயத்தை குலைத்து விடும்.இதற்கு அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு வழியை உருவாக்கியுள்ளனர்.
'அய்சோசோரிக்'
குளிர்விப்பு முறை என்ற இம்முறையில், இதயத் திசுக்களை ஒரு திரவத்தில் வைத்து, ஒரு கண்ணாடிக் கலனில் இட்டு, உறைய வைத்தனர்.இத்திசுக்களை மூன்று நாட்களுக்குப் பின் வெளியில் எடுத்தபோதும் இதயத் திசுக்கள் மறுபடியும் துடித்தன. எந்த திசுவிலும் உறைபனி சேதாரம் இல்லை. இதய மாற்று சிகிச்சைக்கு புதிய விடியலை இந்த கண்டுபிடிப்பு அளித்திருக்கிறது.
No comments:
Post a Comment