அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் மோடி அரசு சோனியா காந்தி சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் மோடி அரசு சோனியா காந்தி சாடல்

புதுடில்லி, அக்.27- மோடி அரசின் நட வடிக்கைகள் அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை தகர்ப்ப தாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

2022ஆம் ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்த லுக்கு இப்போதிருந்தே ஆட்சியில் இருப்ப தால் அதைத் தக்கவைக்கும் முயற்சியில் பா... தீவிரமாக களத்தில் இறங்கி இருக் கிறது. இதுதவிர கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவாவில், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தும் ஆட்சி அமைக்கவிடாமல் பா... தடுத்து விட்டது.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை யான இடங்கள் கிடைப்பதற்காகக் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பிரியங்கா காந்தி அங்கு சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

இந்தச் சூழலில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் தலைமை அலுவ லகத்தில் கூடினர்.

அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத் தின் தொடர்ச்சியாக இக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றி சோனியா காந்தி பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் அனைத்தும் அரச மைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை தகர்ப்பதாக உள்ளது என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும் அவர் பா...வின் பொய்ப் பிரச்சாரங்களை மக்களிடம் அம்பலப் படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் பணியாற்ற வேண்டும். ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள் கைகளால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு,

குறு நிறுவனங்கள், தொழிலாளர்கள்  வேலை இழந்துள்ள இளைஞர்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள் ளனர் என்று சோனியா காந்தி குற்றம் சாட்டினார்

No comments:

Post a Comment