டோக்கியோ, அக். 4- கரோனா வைரசால் மோசமாக பாதிக்கப் பட்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அங்கு இதுவரை 17 லட் சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சமயத்தில் ஜப்பான் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய அவசர நிலை பிறப்பிக் கப்பட்டு கரோனா கட்டுப் பாடுகள் தீவிரமாக்கப்பட்டன.
அதோடு கரோனா தடுப் பூசி செலுத்துவதிலும் ஜப்பான் அரசு தீவிர கவனம் செலுத்தி யது. இதனால் கடந்த ஆண் டின் பிற்பகுதியில் ஜப்பானில் கரோனா வைரஸ் பரவல் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது.
இதை தொடர்ந்து, ஜப் பான் அரசு தேசிய அவசர நிலையை திரும்பப்பெற்று கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனால் ஜப் பான் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்த சூழலில் இந்த ஆண் டின் தொடக்கத்தில் ஜப்பா னில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங் கியது. தலைநகர் டோக்கியோ உள்பட பல மாகாணங்களில் புதிய வகை கரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற் படுத்தியது.
இதைதொடர்ந்து, டோக் கியோ உள்பட 18 மாகாணங் களில் கடந்த ஏப்ரல் மாதம் தேசிய அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. அதன் பின்ன ரும் வைரஸ் பரவல் குறையா ததால் இந்த அவசர நிலை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
அதேவேளையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கூடு தல் கவனம் செலுத்தப்பட்டது. இதன் பலனாக ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் 59 சதவீதம் பேருக்கு முழுமை யாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக ஜப்பானில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரு கிறது. இதற்கு முன்னர் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் குறையாமல் இருந்து வந்த நிலை யில், தற்போது அது 1,500க்கும் கீழாக குறைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தலைநகர் டோக்கியா உள்பட 18 மாகாணங்களில் அமலில் உள்ள அவசர நிலை விரைவில் திரும்பப்பெறப்படும் என பிரத மர் யோசிஹைட் சுகா அறிவித்திருந்தார்.
அதன்படி ஜப்பானில் தேசிய அவசர நிலை திரும்பப் பெறப்பட்டு கரோனா கட்டுப் பாடுகள் முழுமையாக நீக்கப் பட்டன. இது குறித்து பிரதமர் யோசிஹைட் சுகா கூறுகை யில் ‘‘ஜப்பானில் வைரஸ் பர வல் குறைந்துள்ளது. இதனால், கரோனா கட்டுப்பாடுகள் முழு மையாக விலக்கப்படுகின்றன. வைரஸ் தடுப்பு நடவடிக்¬ களில் கடைப்பிடிப்பதில் பொறுமை மற்றும் ஒத்து ழைப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி. கட்டுப்பாடுகளை திரும் பப்பெறுவதிலும் உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கி றேன். இதன் மூலம் சமூக பொருளாதார நடவடிக்கை கள் வழக்கமான நிலையை வந்தடையும்'’ என கூறினார்.
இதனிடையே கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இதுநாள் வரை வீடுகளுக்குள் முடங்கி கிடந்த ஜப்பான் மக் கள் தங்களின் அன்றாடப் பணி களுக்காக வெளியே செல்ல தொடங்கியதால் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கட்டுப்பாடுகள் காரண மாக வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்த அனை வரும் தற்போது அலுவலகத் துக்கு செல்ல தொடங்கியுள்ள னர். இதனால் ‘பீக் ஹவர்ஸ்’ என்று அழைக்கப்படும் காலை நேரத்தில் ரயில்களில் மக்கள் கூட்டம் கட்டுங்கடங்காத நிலையில் இருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.
கட்டுப்பாடுகள் முழுமை யாக திரும்பப்பெறப்பட்டா லும் வைரஸ் பரவாமல் இருக்க பொது இடங்களில் முகக் கவ சம் அணிவது, தனிமனித இடை வெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்கள் தொடர்ந்து பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள சூழ லில் தனிமனித இடைவெளியை மறந்து ரயில்களில் மக்கள் கூட் டம் கூட்டமாக செல்வது தொற்று பரவல் குறித்த கவ லையை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment