2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: ஈகுவடார் அரசு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 4, 2021

2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: ஈகுவடார் அரசு முடிவு

குயிட்டோ, அக். 4- தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் சிறைச் சாலை உள்ளது. இந்த சிறைச் சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதி கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அவ்வப்போது குழு மோத லிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், குயாகுவில் சிறைச்சாலையில் கடந்த வாரம் இருதரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் பெரும் கலவர மாக வெடித்தது. இந்த கலவ ரத்தில் 118 கைதிகள் உயிரிழந் தனர். மேலும் 79 கைதிகள் படு காயமடைந்தனர்.

ஈகுவடாரில் உள்ள சிறைச் சாலைகளில் சுமார் 39 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள் ளனர். அதிக எண்ணிக்கையிலான கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டதாலும், கைதிகளை கண்காணிக்க போதிய அதிகாரிகள் பாது காப்புப் பணியில் ஈடுபடாததும் இதுபோன்ற மோதல்கள் வன் முறையில் முடிய காரணமாகி யுள்ளது.

இந்நிலையில், சிறையில் உள்ள 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடு தலை செய்ய ஈகுவடார் அரசு முடிவு செய்துள்ளது. சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக் கையை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட உள்ளது.

சிறையில் அடைக்கப்பட் டுள்ள கைதிகளில் பெண்கள், வயதானோர், மாற்றுத்திறனா ளிகள், உடல்நலம் பாதிக்கப்பட் டோரில் 2 ஆயிரம் பேரை பொதுமன்னிப்பு வழங்கி விடு தலை செய்ய அரசு திட்ட மிட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் பாது காப்பை அதிகரித்து, மோதல் களை தவிர்க்கலாம் என்ற நோக்கத்தோடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வரு கிறது.

No comments:

Post a Comment