சென்னை, அக்.27 நான்கு சக்கர வாகனப் பயணத்தில் இன்றுள்ள அதிநவீன சிறப்பு வசதிகளை அனுபவிக்க விரும்பும் தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்காக, வால்வோ கார் இந்தியா, 2 புதிய பெட்ரோல் வாகனங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
செடான் எஸ்90 மற்றும் நடுத்தர அளவுள்ள சிறப்பு எஸ்.யூ.வி. எக்ஸ்.சி.60 என்ற பிராண்ட் பெயர்களில், இந்த இரு கார்களின் அறிமுகம் சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் உள்ள வால்வோ விற்பனையகத்தில் நடைபெற்றது.
இந்த வாகனங்களில் கூகுள் உள்ளிட்ட பிற நவீன அப்ளிகேஷன்களைஞ் மென்பொருள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எளிதாக வாகனத்தை இயக்கிச் செல்லும் வசதிகள் உள்ளன. அதனால், கூகுள் அசிஸ்டெண்ட் உதவியை குரல் வடிவில் பெற முடிவதோடு, கூகுள் மேப்ஸின் வழிகாட்டுதலும் உங்களுக்கு கிடைக்கும் என இந்நிறுவன இயக்குநர் ராஜீவ் சங்கான் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment