நீட்டை எதிர்த்து முதலமைச்சர் கடிதம் ஆந்திர முதலமைச்சரிடம் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

நீட்டை எதிர்த்து முதலமைச்சர் கடிதம் ஆந்திர முதலமைச்சரிடம் அளிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவின்படி, “நீட்தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும் - அதனை ரத்து செய்திட, ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமென 12 மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், கடந்த 6.10.2021 அன்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை நேரில் சந்தித்து அளித்ததைத் தொடர்ந்து, நேற்று (11.10.2021), காலை, ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அவர்களை, ஆந்திர மாநிலம், அமராவதியில்  உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலினின் கடிதத்தையும் -  நீட்தேர்வு குறித்து தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் .கே.ராஜன் அளித்த பரிந்துரைகளையும் இணைத்து, வழங்கினார். அப்போது, தி.மு..மருத்துவ அணி இணைச் செயலாளரும் - வடசென்னை தொகுதி நாடாளுமன்ற திமுக உறுப்பினருமான டாக்டர் கலாநிதி வீராச்சாமி உடனிருந்தார்.

No comments:

Post a Comment