சென்னை, அக். 12- தென் சென்னை மற்றும் திரு வள்ளூர் மாவட்டங்களில் காசநோய் திட்ட ஒழிப்பு செயல்பாடுகள் தொடர் பான ஆய்வு கடந்த 7ஆம் தேதி முதல் நேற்று (11.10.2021) வரை நடை பெற்றது. உலக சுகாதார அமைப்பின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பா ளர் ரஞ்சனி ராமச்சந்திரன் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற் கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவு களை அறிக்கையாக தயார் செய்து நேற்று (11.10.2021) சென்னை தலைமை செய லகத்தில் மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியனிடம் ஒப்படைத்தனர். இந்த ஆய்வு அறிக்கையின் விவ ரம் வருமாறு:-
இந்தியாவில் காச நோயை குறைக்க தேசிய காசநோய் தடுப்பு திட்ட மானது கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட மாக மாற்றப்பட்டு செயல் பட்டு வருகிறது. வரும் 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ‘காசநோய் இல்லாத தமிழ் நாடு - 2025’ என சிறப்பு திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தமிழ் நாட்டில் திருவள்ளூர் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு புதிய காச நோயாளிகளை குணப் படுத்துவதில் 86 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு காலத்தில் 39 ஆயிரத்து 222 காச நோயாளிகளுக்கு தேவைப்படும் காசநோய் மருந்துகள் காசநோய் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் இருப் பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை நெறி முறைகளின்படி அவர்க ளது வீட்டிலேயே சளி மாதிரி, ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டு, தொலை பேசி வாயிலாக சிகிச்சை குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் இணைய தளம் மூலமாக அனைத்து மருந்தகங்களிலும் காச நோய் மருந்து வினியோ கம் குறித்த தகவல் அளிப் பதன் மூலம் தனியார் அமைப்புகளிலும் காச நோய் சிகிச்சைகளை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் காசநோய் கண்டறியும் முகாம்கள் மூலம் 42 ஆயிரத்து 797 பரிசோத னைகள் செய்யப்பட்டு, 465 பேருக்கு காசநோய் இருப்பது தெரியவந்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட அமைச் சர் மா.சுப்பிரமணியன், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என ஆய்வுக் குழுவி னரிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment