நீட் தேர்வு, டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

நீட் தேர்வு, டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள்

திரும்பப் பெற தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை, அக். 12 கடந்த .தி.மு.. ஆட்சிக்காலத் தில் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 868 வழக்குகளை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட அரசாணையில் கூறப் பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த செப் டம்பர் 13ஆம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதல்-அமைச்சர் மு.. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட் டார்.

அதில், நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய வர்கள் மீது முந்தைய அர சால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து அரசுக்கு காவல்துறை இயக்குநர் கடிதம் எழுதி யிருந்தார். அதில், 2011-2021ஆம் ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும், 2014-2021 ஆம் ஆண்டுகளில் நீட் தேர்விற்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வழக்கு பதிவு செய்யப்பட் டவர்களின் விவரங்களை குறிப்பிட்டிருந்தார். மேலும், அரசு குற்றவியல் தலைமை வழக்குரைஞ ரின் ஆலோசனையின் பேரில் அந்த வழக்குகளை திரும்பப் பெறலாம் என்று கூறியிருந்தார்.

வன்முறை போராட் டங்கள், தூண்டிவிடும் பேச்சு தொடர்பான வழக்குகளும், நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் களுக்கு எதிரான வழக்கு களும் இதில் சேர்க்கப்பட வில்லை என்றும் காவல் துறை இயக்குநர் தெரிவித்திருந்தார்.

திரும்ப பெறப்பட வேண்டிய வழக்குகளுக் கான பரிந்துரைகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது சம்பந்தப்பட்ட காவல்துறை ஆணையர் கள் அளித்துள்ளனர். அதன்படி, நீட் தொடர் பான போராட்டங்க ளுக்கு எதிராக 446 வழக் குகளும் (105 வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிலுவை), டாஸ்மாக் தொடர்பான போராட் டங்கள் தொடர்பாக 422 வழக்குகளும் (83 வழக்கு களில் நீதிமன்ற விசா ரணை நிலுவை), என மொத்தம் 868 வழக்கு களை திரும்பப் பெறலாம் என பரிந்து ரைக்கப்பட்டு உள்ளது.

வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக அரசு குற்றவியல் தலைமை வழக்குரைஞ ரும் தனது கருத்தை அளித்துள்ளார். அதில், காவல்துறை விசாரணை நிலுவையில் உள்ள வழக் குகளையும், குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப் படாமல் இருக்கும் வழக் குகளையும் சம்பந்தப் பட்ட காவல்துறையி னரே கைவிட்டுவிடலாம்.

நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு, சம்பந்தப் பட்ட அரசு உதவி வழக் குரைஞர்கள் மூலம் சம் பந்தப்பட்ட நீதிமன்றங் களில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்துகளை அரசு கவனமுடன் பரிசீலித்து மொத்தமுள்ள 868 வழக்குகளையும் திரும்ப பெறுவதற்கு ஆணையிடு கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment