டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற 2 வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற 2 வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை

சென்னை, அக். 12 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 2 வீராங்கனைகளுக்கு மின்சார வாரியத்தில் பணி நியமன ஆணையைமுதலமைச்சர் மு..ஸ்டாலின் வழங்கினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட் டியில் கலப்புத்தொடர் ஓட்டத்தில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள் வெ.சுபா, எஸ்.தனலட்சுமி ஆகி யோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியி டத்திற்கான பணிநியமன ஆணை களை முதலமைச்சர் மு..ஸ்டா லின் வழங்கினார்.

ஒலிம்பிக், பன்னாட்டு மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த விளை யாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்க வசதியாக விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், உயர் செயல்திறன் மிக்க பயிற்சி அளித் தல், வெற்றி பெறும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது.

அந்த வகையில், திருச்சி மாவட் டத்தைச் சேர்ந்த இரு வீராங்க னைகள் வெ.சுபா, எஸ்.தனலட்சுமி ஆகியோர் கடந்த 30.7.2021ஆம் நாளன்று ஜப்பான் நாட்டின் டோக் கியோ நகரில் நடைபெற்ற ஒலிம் பிக் போட்டிகளில் 4400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங் கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

இவ்விரு வீராங்கனைகளையும் கவுரவப்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நடந்தது. வீராங்க னைகள் இருவருக்கும் முலமைச்சர் மு..ஸ்டாலின் பணி நியமன ஆணை களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment