தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: மலேசியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 4, 2021

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: மலேசியா

கோலாலம்பூர், அக். 4- மலேசியாவில் விரைவில் பள்ளிகள் திறக்க உள்ள தால், ஆசிரியர்கள் விரைவாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “மலேசியாவில் அக் டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதன் கார ணமாக ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தீவிர நடவடிக்கைகளை மலேசிய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மறுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பணி நீக்கமும் செய்யப்படலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளதுஎன்று செய்தி வெளியாகியுள்ளது.

மலேசியாவில் இதுவரை 22 லட்சம் பேர் கரோனாவால் பாதிக் கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள் ளனர். கரோனா பரவலைக் கட்டுப் படுத்த, கரோனா தடுப்பூசி செலுத் துவதையே பிராதான நடவடிக் கையாக உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி வருகின்றன. உலகம் முழுவதும் 23 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள் ளனர். 21 கோடி பேர் கரோனா விலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலி யாகி உள்ளனர்.


No comments:

Post a Comment