துபாய், அக். 4- ஸ்பெயின் கடல் பகுதி யில் 2 நீச்சல் வீரர்கள் நீச்சலின் போது 1500 ஆண்டுகள் பழைமை யான தங்க நாணய குவியலை கண் டறிந்தனர். விலைமதிப்பில்லாதது என இதனை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லூயிஸ் லென்ஸ் பார்டோ, செசார் கிமனோ என்ற சகோதரர்கள், ஸ்பெயின் சுற்றுலா கடல் பகுதியான சாபியாவில் தங் கள் குடும்பத்தினரோடு விடுமுறையை கழிக்க சென்றனர். இருவரும் அந்த கடல் பகுதியை சுத்தப்படுத்தும் நோக்கில், கடலின் ஆழ் பகுதியில் நீந்திய போது ஒளிச் சுடரை கண் டனர். அருகில் சென்று பார்த்த போது பழங்கால தங்க நாணயம் என்பதை அறிந்தனர் அங்கிருந்து 8 தங்க நாணயங்களை எடுத்தனர். அவற்றை ஆய்வு செய்ததில், நாண யத்தில் கிரேக்க, ரோமானிய முகம் அச்சிடப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து தொல் பொருள் மற்றும் இனவியல் அருங் காட்சியகம் துறையினர் கடல் சாகச வீரர்கள் உதவியுடன் நாண யம் எடுக்கப்பட்ட ஆழ்கடலில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், கிபி 364 முதல் 408ம் ஆண்டு காலத்தின் 53 தங்க நாணய குவி யலை கண்டறிந்தனர். ஒவ்வொரு நாணயமும் 4.5 கிராம் எடை இருந்தது. 1500 ஆண்டுகள் பழை மையான இவை அனைத்தும், வர லாற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. ‘இந்த தங்க நாணயங்கள் பண்டைய வரலாற்றின் மிகப் பெரிய புதையல். விலை மதிப்பற்றது. ரோம் பேரரசின் இறுதிக் கட்டம் குறித்த வரலாற்று ஆய்வுகளுக்கு இந்த தங்க குவியல் பெரும் உத வியாக இருக்கும்,’ என, அலி காண்டே பல்கலைக் கழகத்தின் பண்டைய வரலாற்று பேராசிரிய ரான ஜெய்ம் மோலினா வைடல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment