சென்னை, அக்.6- மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் ஜவாஹிருல்லா ராசகிரி கோ.தங்கராசு மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:
தந்தை பெரியாரின் கொள்கையைத் தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றி, அதனைப் பரப்புரை செய்யும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட திராவிடர் கழகத்தின் முதுபெரும் தலைவர் ராசகிரியார் என்று அன்புடன் அழைக்கப் பட்ட அய்யா கோ.தங்கராசு அவர்கள் மரணித்தார் என்ற செய்தியறிந்து வருத்த முற்றேன்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன துணைத் தலைவராகவும், திரா விடர் கழகத்தின் செயலவைத் தலைவராக வும், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் செயலாளராகவும் பணியாற்றிய அவர், சட்ட எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட பல் வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றுள்ளார்.
சிறுபான்மை சமுதாயத்துடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணி சிறு பான்மை மக்களின் பேரன்பைப் பெற்றவர் அய்யா கோ. தங்கராசு அவர்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம் தொகுதியில் நான் வேட்பாளராகப் போட்டியிட்ட போது, எனக்கு ஆதரவளித்த தோடு மட்டுமின்றி, கபிஸ்தலத்தில் திரா விடர் கழகத்தின் சார்பில் என்னை ஆத ரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் உற்சாகத்து டன் அவர் பங்கேற்று அமர்ந்திருந்த நிகழ்வு என்னால் மறக்க முடியாது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்,திராவிடர் கழக உறவுகள் உள்ளிட்ட சமூக நீதிப் பற்றாளர்கள் அனை வருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹி ருல்லா இரங்கலில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment