பெண் குழந்தைகளைப் போற்றுவோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

பெண் குழந்தைகளைப் போற்றுவோம்

ஒவ்வொரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் பெண் குழந்தைகள் காரண மாக இருக்கிறார்கள் என்பது பாராட்டுக் குரிய ஒன்றாகும். எனவே அவர்களை பேணிப் பாதுகாப்பது இன்றியமையாக் கடமை. பெண் குழந்தைகளின் உரிமை களை நிலைநாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தைப் பெறவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் 2011-ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

அதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண் டும் அக்டோபர் 11-ஆம் நாள்சர்வதேச பெண் குழந்தைகள் தினம்  நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நாளின் முக்கிய நோக்கம்; பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல், சம உரிமை - சம வாய்ப்பு வழங்குதல், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதி கரித்தல், அவர்களுக்கு நேரும் பிரச்சினை களைத் தடுத்தல் மற்றும் பெண் குழந்தை களுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவையாகும். ஆனாலும்,  ஆண் குழந்தை - பெண் குழந்தை என்ற பாகுபாடு இந்த நூற்றாண்டிலும் மக்களிடையே மண்டிக் கிடக்கின்றன என்பது ஓர் கசப்பான உண்மை நிலையாகும். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தை களின் பிறப்பு விகிதமும், எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகின்றது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இத் தகைய விபரீதப் போக்கு சமுதாயச் சீர் கேட்டுக்கு வழிவகுக்கும் என்று பெண்ணி யவாதிகள், சமூகநல ஆர்வலர்கள், முற் போக்குச் சிந்தனையாளர்கள் ஆகியோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டிலுள்ள பெண்களின் முன்னேற் றத்தைப் பொறுத்தது ஆகும். சமுதாய வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு அடித்தள மிடுபவர்கள் பெண்கள் என்பதை படிக்காத பாமர மக்கள் மட்டுமன்றி மெத்தப் படித்த பண்பாளர்களும் ஏனோ உணர மறுப்பது வேடிக்கை! வினோதம்!

இதன் விளைவாக, வீட்டில் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருப்பின், அடுத்த குழந்தை ஆணாக இருக்க வேண் டும் என்பதே பெரும்பாலான பெற்றோர் களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால் இரண்டாவது முறையாக கருவுறும்போது ஆணா? பெண்ணா?  என்பதை சோதனை செய்து அப்பரிசோதனையில் பெண் குழந்தை எனத் தெரியும் நிலையில், அக் குழந்தையை பெற்றோர்கள் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர் என்பது துயரமான விடயமாகும்.

எடுத்துக்காட்டாக 2019இல் உத்தரா கண்ட் மாநிலத்தில் உத்தரகாசி எனும் பகுதி யைச் சுற்றியுள்ள 132 கிராமங்களில் மூன்று மாதங்களில் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றுகூட பெண் குழந் தைகள் இல்லை என்பது வியப்பிலும் வியப்பு!

இத்தகைய அவலநிலையை எண்ணி சமூகநல ஆர்வலர்கள், பெண்ணிய வாதிகள், தொண்டுள்ளம் கொண்டோர் மற் றும் மனிதநேய மாண்பாளர்கள் ஆகியோர் வெட்கமும் வேதனையும் அடைந்துள்ளனர்.

பெண்கள் நாட்டின் கண்கள், பெண் களைப் படிக்க வைப்போம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்போம் என்று வாய்மாளம் பேசிக்கொண்டு பெண் குழந்தைகளை கருவிலேயே சிதைப்பதும் - சிசுக்கொலை செய்வதும் சிறிதும் ஈவு - இரக்கமற்ற , மனிதநேயமற்ற அநாகரீகச் செயலாகும்.

ஒரு சமுதாய வளர்ச்சிக்கு, எழுச்சிக்கு, உயர்வுக்கு பெண்களின் பங்களிப்பு என் பது இன்றியமையாததாகும். இத்தகைய உண்மையை சிறிதும் உணராதவர்களாக - உணர மறுப்பவர்களாக பெண் குழந்தை கள் எனத் தெரிந்து கருக்கலைப்பு மற்றும் சிசுக் கொலை செய்கின்ற பெற்றோர்களும், அதற்கு உடந்தையாக இருப்பவர்களும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர்.

ஆகவே, மேற்கண்ட விரும்பத்தகாத விபரீதச் செயல்கள் இனிமேல் நடக்காமல் தடுத்து நிறுத்திடும் வகையில்; ‘பெண்ணுரி மைக் காவலர்தந்தை பெரியார் காண விரும்பிய ஆண் -பெண் பாகுபாடற்ற  சமத்துவச் சமுதாயத்தை படைத்திட  பெண் குழந்தைகள் நாட்டின் கண்கள் மட்டுமல்ல - எதிர்காலச் செல்வங்கள் என்பதை உணர்ந்துசர்வதேச பெண் குழந்தைகள் தினம்கொண்டாடப்படுகின்ற அக் டோபர் 11இல் பெண் குழந்தைகளின் நலன் களை, உரிமைகளை பேணிப் பாதுகாத்திட, பெண் குழந்தைகளின் பெருமைகளைப் போற்றிப் புகழ்ந்திட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யில் உறுதியேற்போம்.

வாழ்க பெரியார்! வளர்க மனிதநேயம்!

  - சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.


No comments:

Post a Comment