திராவிட தமிழின உறவுகளே! வணக்கம்.
1946இல் வெற்றிகண்ட சோழபுரம் (செயங்கொண்டம்), ஏழு ஆண்டுகளாக கழகப்பணியை பொறுப்புடன் ஆற்றியவர் கருப்புச்சட்டை உடுத்தி, “விடுதலை” ஏடு படித்ததனால், உடையார்பாளையம் பதிவு அலுவலகப் பணியில் இருந்து நீக்கப்படுகிறார்.
திருச்சிராப்பள்ளி புத்தூர் மாளிகையில் இருந்த தந்தை பெரியாரிடம், “அய்யா வணக்கம்“ என்கிறார்.
“வாங்க அரி என்ன சங்கதி?” என்று நலம் விசாரிக்கிறார்.
அய்யா, என்னுடைய பதிவு அலுவலக மேல் அதிகாரி பார்ப்பனர் என்பதனால், என்னை பணியில் இருந்து நீக்கி விட்டார்” என்று அய்யாவிடம் சொல்ல, உடனே, “உங்களைப் போன்றோர்களை, உபாத்தியாயர் (ஆசிரியர்) பள்ளியில் படிக்க வைத்து நீங்கள் பகுத்தறிவு கலந்த ஆசிரியர் பணியைச் செய்வதற்குத் தான் பயிற்சிப்பள்ளி துவங்கப்பட்டுள்ளது” என்று பெரியார் சொல்ல, எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்க, “கட்டணத் தொகையில் அய்ந்து ரூபாய் குறைகிறது” என்றார். உடனே “அய்ந்து ரூபாய் நோட்டும்“, கலியராசுலு என்கிற நிர்வாகிக்கு “ஒரு சீட்டும்“ பெரியார் கொடுக்கிறார்.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அனுமதி வழங்கப்படுகிறது, 1954இல் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில், திருச்சிராப்பள்ளி ஜில்லாவில், கொள்ளிடம் நீர் தழுவிப் பாயும் எழில்மிகு பசுமை நிறைந்த குக்கிராமத்தில் காவல் நிலையம் திறக்கப்பட்டது என்றால், இன்றைய திருமானூர் ஒன்றியம், வைப்பூர் - தூத்தூரில் தான். ஜாதி உணர்வடன் அடர்த்தியாக வாழ்கிற மக்கள், கல்வி மறுக்கப்பட்ட சமூகம் என்பதால், பகையுணர்வை மின்னல் வேகத்தை மிஞ்சுகிற அளவிற்கு, ஆயுதம் கொண்டு தாக்கிக் கொள்பவர்கள். எனவே, அந்த கிராமத்திற்கு அரசு “ஓராசிரியர்” பாடசாலையை துவங்கி பணி உத்தரவு வழங்கப்படுகிறது.
ஆசிரியர்கள், 1,2,3 என்று கிராமத்தின் சூழலை உள்வாங்கி, குலைநடுக்கத்துடன் பணியில் சேர்வதை மறுக்கிறார்கள், 4 ஆவது நபராக எனது தந்தைக்கு பணி அமர்வு உத்தரவு வருகிறது.
பணி வாய்ப்பைப் பெற்றுக்கொண்டு ஓராசிரியர் பள்ளியைத் துவங்கி மக்களிடத்தில் கல்வியின் தேவையை வீடு வீடாகச் சென்று “திண்ணைப் பிரச்சாரம்“ செய்து, மாணவர்களைச் சேர்த்து அக்கிராமத்தில் “மூன்றாசிரியர்” பள்ளியாகத் தரம் உயர்த்தி கல்வி, பகுத்தறிவு, மனிதநேயம், இவற்றைக் கற்பித்து மக்களிடத்திலே பிரியா விடைபெறுகிறார்.
அவரின் இணையேற்பு விழா பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணமாக ஏற்பாடு நடைபெறுகிறது.
பெரியாரும் வந்து விடுகிறார். திடீரென்று திருமணம் தடைபடுகிறது. ஏனென்றால், எனது தாயின் மூன்று சகோதரர்களில் ஒருவர், சுயமரியாதைத் திருமணத்திற்குக் கடும் எதிர்ப்பைக் காட்டுகிறார். அன்றைய பொழுது மறைகிறது.
சமரச முயற்சியில் மறுநாள் காலை இணையேற்பு விழா நடை பெறுகிறது. இணையர்கள் இருவரும் 6 மகன்களை ஈன்றெடுக்கிறார்கள், பிள்ளைகளின் எண்ணிக்கை சற்று கூடுதலாக இருந்தாலும், இருவரும் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர்சூட்டி தனிமனித ஒழுக்கம்,பொது ஒழுக்கம், கல்வி, பகுத்தறிவு போன்றவற்றை தந்ததனால், உணர்வாலும், உயிர்த் துடிப்பாலும் தினந்தோறும் அவர்களை நினைவுகூர்ந்து போற்றுகின்றேன்.
6 மகன்களும்,மருமகள்களும்
மரு. ச.அ அன்பினுருவன்-செயந்தி
மரு. ச.அ. எழிலோவியன்- கற்பகம்
(அரசு மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்)
மரு. ச.அ.கிள்ளிவளவன்- சம்பத்ராணி
மானமிகு.ச.அ.பெருநற்கிள்ளி-லீலாதேவி
மரு. ச.அ.அசோகன்-வெண்ணிலா
ச.அ.இளையகுமார் செந்தமிழ்ச்செல்வி (நடுநிலைப்பள்ளி அரசு தலைமை ஆசிரியர்)
பேரப்பிள்ளைகள் மரு. க.எ.தேன்குழலி, (MS, மகப்பேறு மருத்துவர்)
மரு.விசயகுமார் (MS.,அறுவை சிகிச்சை நிபுணர்)
மரு. ச.கி.இசைஒலி, (பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர்)
மரு.மதன் குமார், (MS.,எலும்பு நோய் &மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்)
மரு. க.எ.பால்வண்ணன், (மயக்கவியல் நிபுணர்,)
மரு.ரோகிணி, (பொது மகளிர் மருத்துவர்,)
மரு. செ.அ.நல்லிளந்தென்றல், (சோனாலஜிஸ்ட் &பொது மருத்துவர்)
மரு. பாலமுருகன்,(பொது மருத்துவ நிபுணர்)
மரு. செ.அ.பகுத்தறிவாளன். (சோனாலஜிஸ்ட் & பொது மருத்துவர்,)
மரு. செனிபர் சினேகலதா, (பொது மருத்துவ நிபுணர்)
மரு. லீ.பெ.கோப்பெருந்தேவி, (அவசர சிகிச்சை & பொது மருத்துவர்,)
மரு.ரவிக்குமார் (குழந்தைகள் சிறப்பு நிபுணர்)
மரு. செ.அ.உயிரோவியம் (பல் மருத்துவர்,)
கு.பிரகாச் (கடல் பொறியாளர்)
வெ.அ.மதிவதனி (உயிரிதொழில் நுட்பவியல் துறை இயக்குநர்).
துவாரக் ராசா (திரைப்படத் துறை)
மரு. ச.கி.இருமலர் (பொது மருத்துவர்,)
மரு.சுரேச் குமார் (எலும்பு நோய் அறுவை சிகிச்சை நிபுணர்,)
மரு. வெ.அ.அருண் வதனி (அறுவை சிகிச்சை நிபுணர்,)
மரு.கவித் தென்றல் (கதிர்வீச்சு இயல் புற்றுநோய் நிபுணர்,)
மரு. செ.இ.இன்பக் கவிஞன் (பொது மருத்துவர்),
மரு. செ.இ.வெண்முகில் (பொது மருத்துவர்)
3 ஆம் தலைமுறை கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் பெயர்கள்
தேனமுதன், மித்ரா, மிருதுளா, இன்மொழி, வர்மன், புகழினி, ஆதவன், மகிழன், நளினா, நறுமுகை, அதிரன், ஆதிரா, இளன் நவிரன், ஆதிரன், அதியன்.
“இந்துமதக் கோட்பாடுகளை முற்றிலும் தவிர்த்து, பெரியார் கொள்கை ஒன்றே பெரிதென மதித்து நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைப்போல, தமிழில் பெயர் சூட்டி, தரணியில் தமிழ் வாழ எங்கள் தாய் தந்தை, “சரசுவதி -அரிகோவிந்தன்” அவர்களுக்கு, “ஆசிரியர் பயிற்சிப் பள்ளி சீட்டும், அய்ந்து ரூபாய் நோட்டும்“ வழங்கி வாழ்வியல் அறமும் வளமும் தந்த அந்தக் கிழவன், மனிதன் அல்ல, மானுடத்தின் கதிரவன்”
கோடானகோடி திராவிடத் தமிழினத்திற்கு தன்மானம்சிமூட்டி
தரணியில் பகுத்தறிவு ஒளி பாய்ச்சிய பகலவன்,
“தந்தை பெரியார் ஒருவரே பெரியார்”
இவண்,
ச.அ.பெருநற்கிள்ளி
தி.மு.க. கொள்கை பரப்பு
துணைச் செயலாளர்
No comments:
Post a Comment