யார்பெரியார்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

யார்பெரியார்....!

 சட்டமன்றம்

செல்லாமலே

சட்டம் கண்டவர்!

 

பாராளுமன்றம்

பார்த்திராதவர்!

பாரெங்கும்

பேசப்படுபவர்!

 

அதிகாரம்

இல்லாமலே

அரசாட்சி செய்பவர்!

அக்கிரகாரங்களை

ஆட்டி வைத்தவர்!

 

பள்ளிக்கூடம்

செல்லாமலே

பகுத்தறிவைப்

போதித்தவர்!

 

மாணவராகாமலே

பல்கலைக்கழக

மானவர்!

 

பட்டம்

பெறாமலே

தத்துவ

மேதையானவர்!

 

சரித்திரம் படிக்காமலே

சரித்திரம் ஆனவர்!

சுயநலம் இல்லாமலே

சுயமரியாதை

இயக்கம் கண்டவர்!

 

கடவுளை நம்பாமலே

கடவுளை நம்பும்

மக்களின் மனதில்

இடம் பிடித்தவர்!

 

சாதியை

ஏற்காமலே

சமத்துவ

 

சமுதாயம் படைத்து

சாதித்தவர்!

 

நீதிமன்றம்

செல்லாமலே

நீதிமன்றத்திற்கே

நீதி சொன்னவர்!

 

பெண்ணாக

பிறக்காமலே

பெண்ணுரிமையை

மீட்டெடுத்தவர்!!

 

தந்தை

ஆகாமலேயே

தமிழ்

மக்களுக்கெல்லாம்

தாயும்

தந்தையுமானவர்!

பெரியார்! பெரியார்.! பெரியார்...!!

- சிற்பி சேகர்,  பட்டுக்கோட்டை

No comments:

Post a Comment