வீட்டு வேலைகளிலிருந்து பிள்ளைகளை விலக்கி வைப்பது சரியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

வீட்டு வேலைகளிலிருந்து பிள்ளைகளை விலக்கி வைப்பது சரியா?

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்தும் மானுடர்களுக்கான மிகப்பெரிய ஆய்வு களில் ஒன்றான  Harvard Grant study  எனும் ஆய்வில், குழந்தைகளை அன்றாட வீட்டுப் பணிகளில் இருந்து விலக்கி வைப்பது பெரும் அபத்தம் எனவும், இதனால் அவர் களது பலவகையான ஆற்றல்களின் ஆக் கங்கள் குறைபடும்.எனவும் அறிவுறுத்துகிறது, மேலும், படிப்பு, கற்றல், போட்டி தேர்வு, தரவரிசை, மதிப்பெண், மதிப்பீடு, பல்வேறு கலை கற்றல் இவை அனைத்திற்கும் தேவைப்படும் ஆக்கமும், ஊக்கமும், மன தைரியமும், நம்பிக்கை தூண்டலும், வெற்றி, தோல்விகளை பகுத்தறியும் பக்கு வமும், உடனிருப்போருடன் உறவாடும் உளவியலும், சுயமாக வீட்டில் நடத்திடும் நடத்தைகளே தீர்மானிக்கும் என்கிறது இந்த ஆய்வு.!

மாறாக, சிறு வேலைகளை கூட செய்திட முடியாமல் இருக்க செய்ய-செய்திட அனு மதிக்காத பெற்றோர்களை இந்த ஆய்வு எச்சரிக்கிறது,

சார்.. என்ன சார் இது குழந்தையை எல்லாம் வேலை வாங்க சொல்றீங்க, குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க பாடுபடும் தேசம் சார் இது?

உண்மை!,

நான் அவர்களை வேலை வாங்க சொல்ல வில்லை, உங்கள் அன்றாட வேலைகளில் அவர்களை சேர்த்துக் கொள்ளத்தான் சொல்கிறேன்! தினமும் பள்ளி செல்லும் குழந்தைகளானால் அவர்களது தண்ணீர் பாட்டிலை அவர்களே நிறைக்கச் செய்யுங் கள், அவர்களின் உணவுத்தட்டினை அவர் களை எடுத்து வந்து உணவை வாங்கி, தானாக உண்ண செய்யுங்கள். அவர்கள் தலை சீவுவது, காலணி அணிவது, அதற் கான பாலிஷ் போடுவது, வார விடுமுறை களில், வீட்டின் சுற்றங்களை சுத்தம் செய் தல், செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், கார் () பைக் கழுவ உதவுதல், படுக்கை உறை மாற்றுதல், வாஷிங் மெசினில் அவர்கள் துணிகளை எடுத்து போடுதல், வெயிலில் காய்ந்த துணிகளை மடித்து வைத்தல், சமை யலுக்கு காய்கறி கழுவுதல், குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்தல், சமையலறை பொருட்களை அடுக்குதல், என சின்ன சின்ன வேலைகளை வார கடமையாக் கிடுங்கள்.

அவர்களை அன்றாட வாழ்வியலிலி ருந்து அன்னியப்படுத்தி விடாதீர்கள், இவ் வனைத்திற்கும் ஒரு அழகான சன்மானம் வாரா வாரம்  வழங்கிடுங்கள், அவர்கள் விரும்பும்படி ஏதேனும் ஹாபி அமைத்து கொடுத்தல், மீன் தொட்டி பறவை, நாய்க் குட்டி, புறாக்கள், பூச்செடி  கொடிகள், அவைகளை பராமரித்திட செய்யுங்கள், முடிந்தவரை வீட்டில் இருக்கும் நேரங்களில் தொலைக்காட்சி கணினி விளையாட்டுக் கள், திரைப்படங்கள் உணவக உணவுகள் என அவர்களின் எண்ணங்களை செயற் கையான விடயத்திலிருந்து ,இயல்பான நம் அன்றாட தினசரி வேலைகளில் ஈடுபட செய்யுங்கள் இன்று பல கல்லூரி மாணவர் கள், அதிலும் முக்கியமாக மருத்துவம் பயிலும் மாணாக்கர் கூட தற்கொலை வரை சுலபமாக முடிவெடுத்து சென்றிடும் மிக முக்கிய காரணம், தம்மையும் தம் சுற்றத்தி னையும்  பேணிட  அறியாததால் மட்டுமே!!!

குழந்தைகள் ஒன்றும் வீட்டில் வளர்க் கும் ஆர்க்கிட் பூச்செடி அல்ல - பொத்தி, பொத்தி, உரம் போட்டு, நீர் ஊற்றி வளர்க்க, சிறு வெப்ப நிலை மாறினாலும் அது.வாடிப் போய் இறந்துவிடும் மாறாக அவர்கள் காட்டு மரங்கள் போல் வளர்ந்திட வேண் டும், முறையான வழிகாட்டுதலும், அரவ ணைப்பும், அக்கறையும் மட்டுமே இருத்தல் வேண்டும். அதீத ஆர்வமும், தேவையற்ற கரி சனையும், எல்லை மீறிய அன்புபாராட்டு தலும் அவர்களுக்கு நிச்சயமாக நன்மை இல்லை, வாழ்க நல் ஆரோக்கிய வளமுடன்.

- முகநூலிலிருந்து...

No comments:

Post a Comment