காவல் துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

காவல் துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்

முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, அக்.5 காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை முதல மைச் சர் மு..ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று (4.10.2021) தொடங்கி வைத்தார்.

இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது, ஒரு தனி நபரின் ஒளிப்படத்தினை காவல் நிலையங்களில் சிசிடிஎன்எஸ்-இல் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள நபர்களின் ஒளிப்பட தரவு களோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய பயன்படுகிறது.  இதுவரை, 5.30 லட்சம் ஒளிப்படங்கள் சிசிடி என்எஸ்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளன. இந்த மென்பொருளை காவல் நிலையம் மற்றும், களப்பணியின்போது எப்ஆர்எஸ் செயலியை கைப்பேசியிலும் காவல் அலுவலர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இச்செயலியின் மூலம் குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய ஒளிப்படங்களை தரவுகளில் உள்ள ஒளிப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டறியலாம். இச்செய லியின் மூலம் ஒப்பீடு செய்யப்பட்ட ஒளிப்படத்தில் உள்ள நபர், வேறொரு காவல் நிலைய வழக்கில் தொடர் புடையவராக இருந்தால், காவல் அலு வலர்கள் இச்செயலியின் மூலமே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்நபரை பற்றிய தகவல் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இச்செயலியைப் பயன்படுத்தி, காவல் அலுவலர்கள் ரோந்துப் பணி, வாகனத் தணிக்கை மற்றும் இதர காவல் பணிகளை மேற்கொள்ளலாம்.  மேலும், சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும் போது, அவர்களின் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள் ளதா என்பதனை கண்டறிந்து கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அத்துடன் காணாமல் போன நபர் களையும் இச்செயலி மூலம் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வழிவகை ஏற்படும். இந்த எப்ஆர்எஸ் செயலி யானது, குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றத் தடுப்புப் பணிகளை செவ்வனே மேற்கொள்ளவும் காவல்துறையின ருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். வருங்காலங்களில் சிசிடிவி காட்சிப் பதிவுகளில் உள்ள ஒரு நபரின் முகத் தினை அடையாளம் கண்டறிய ஏது வாக, எப்ஆர்எஸ் செயலியில், காட்சிப் பதிவு பகுப்பாய்வு வசதி ஏற்படுத்து வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 இதன்மூலம், சந்தேகத்துக்குரிய நபர்களோ, தேடப்படும் குற்றவாளி களோ அல்லது காணாமல் போனவர் களோ பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் திருவிழாக்கள் போன்ற பொது இடங் களில் நடமாடினால், அவர்களை எளிதாக கண்டுபிடிக்க இயலும். மேலும், கலவரம் அல்லது பெருந் திரளாக மக்கள் கூடியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் எண்ணிக்கை விவரத் தினை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட பகுதியின் பாதுகாப்பிற்கு தேவையான காவலர்களை பணியமர்த்த பயன்படும். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை இயக் குநர் சைலேந்திர பாபு, ஏடிஜிபி வினித் தேவ் வான்கேடே மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment