அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை

சென்னை, அக்.14 அனைத்து ரேஷன் அட்டைதாரர் களுக்கும் பொது வினியோகத் திட் டத்தில் பொருட்கள் வழங்குவதில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை என்று தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள் ளது.

தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர் களுக்கு இடையே எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்குமான பொது வினியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திவரும் நிலையில் சமீபகாலமாக சமூக ஊடகங்கள் சில வற்றில் ஒன்றிய  மற்றும் மாநில அரசு அலுவலர் களுக்கும், ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள குடும்பங்களுக்கும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், 3 அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர் களுக்கும் பொது வினியோகத்திட்ட அரிசி இல்லை என்று எவ்வித முகாந்திரமும் அற்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக அர சின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் அனை வருக்குமான பொது வினியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்து ரேஷன் அட்டைதாரர் களுக்கும் தொடர்ந்து வழங்கப்படுகிறது என் றும், இதில் எவ்வித மாற் றங்களும் மேற்கொள்ள ப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அரிசி பெற்றுவரும் அனைத்து ரேஷன் அட்டைதாரர் களும் இலவச அரிசி மற்றும் பொது வினியோ கத் திட்டத்தில் தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்து பொருட் களையும் தொடர்ந்து பெறலாம் என தெளிவு படுத் தப்படுகிறது. சமூக ஊடகங் களில் பரவிவரும் இது குறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment