ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சக வெளியீடாக, ‘ஒரு ஜனநாயகத்தை கொல்வதற்கு சர்வாதிகாரத்தை நோக்கிய இந்தியாவின் பாட்டை' (To Kill a Democracy: India’s Passage to Despotism) எனும் புத்தகம் வெளிவந்துள்ளது இந்த புத்தகத்தினை தேபாசிஸ் ராய் சவுத்ரி மற்றும் ஜான் கீன் ஆகிய இரு ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். இப்புத்தகம் குறித்த நூலாய்வு "தி இந்து" (10.10.2021) ஆங்கில ஏட்டில் வெளிவந்துள்ளது. நூலாய் வின் ஒரு பகுதி.
"ராய் மற்றும் கீன் ஆகிய இருவரும் பெரியாரின் உலகளாவிய மனிதநேயப் பார்வையை குறிப்பிட்டுச் சொல்கின்றனர். மக்களாட்சியின் சாரம் என்பது மனித சமத்துவ நிலையும், ஒவ்வொரு குடிமகனுக்குமான சுதந்திரமும் ஆகும் என பெரியார் கூறுகிறார்.
மக்களாட்சி என்பது ஒவ்வொருவரும் வாக்களிக்கும் தேர்தலோடு சுருங்கி விடக் கூடியதல்ல. தேர்தல்கள் மனிதருக்கு மலிவானவற்றை கொடுத்து மக்களின் வாக்குகளைப் பெறுவதாக உள்ளது. இதன் மூலம் ஜனநாயகத்தின் சாரம் உறிஞ்சப்பட்டு விடுகிறது. செம் மையான செயல்பாடுடைய ஜனநாயகத்தில் ஒரு தனித்துவமான சமூகவாழ்வு நிலவிட வேண்டும். அந்த மக்களாட்சியில் மக்கள் பசியிலிருந்து விடுதலை பெற்று விடுவார்கள், சமூக இழிவிலிருந்தும் வன்முறையிலிருந்தும் விடுதலை கிடைத்துவிடும். அச்ச உணர்விலிருந்து விடுபட்டு வாழும் உரிமையை முழுமையாக மக்கள் பெற முடியும். தேவைப்படும் மருத்துவக் கவனிப்பு அனை வருக்கும் கிடைத்துவிடும். குறிப்பாக பின்தங்கியோருக்கும் மருத்துவ வசதிகள் பரவலாகும்.
உலகளாவிய உயர்வு சார்ந்த அறிவார்ந்த உணர்வின் வெளிப்பாடாக மக்களாட்சி இருக்க வேண்டும். எதிர் பாராத எந்த சூழ்நிலையையும் ஒவ்வொரு நாடும் எதிர் கொள்ளும் வல்லமை மிக்கதாக மக்களாட்சி ஒளிர வேண்டும்".
"எதையும் மாற்ற முடியாது” எனும் பழங்கதைக் கோட்பாட்டை விலக்கிவிட்டு கல்மேல் எழுத்து போன்று மக்களாட்சி உறுதியாக நிற்க வேண்டும் என்று எழுதப் பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் இருக்கக் கூடிய பார்ப்பனீய தலைமை களும், பார்ப்பனீயத்துக்குப் பலியான கூட்டத்தின் கொசுறுகளும், பிற்போக்குச் சக்திகளும், ஊடகங்களும் என்னதான் 'இருட்டடிப்பு கலையைத்' தொழில் நுட்பத்தோடு செய்தாலும், தந்தை பெரியாரின் மானுடப் பார்வை, உலக மக்களுக்குத் தேவையான சித்தாந்தம் தடைகளைத் தாண்டிப் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறது.
சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா சென்று கொண் டிருக்கிறது என்று கூறும் ஒரு நூலில், தந்தை பெரியாரின் கருத்தினை முன்னிலைப்படுத்திக் கூறுவதன் நோக்கமென்ன?
சர்வாதிகாரத் திசையில் செல்லும் பாசிசத்துக்கு எதிரான கொள்கைக் கோட்பாட்டைக் கொண்டவர் பெரியார் என்பதற்காகத்தானே!
உலகளாவிய தந்தை பெரியாரின் சாரத்தைக் குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவைப் பிடித்து ஆட்டும் மதவாத நோய்க்கான மருந்து- தந்தை பெரியார் அவர்களின் சித்தாந்தம் - சிந்தனைப் பார்வை என்பது இதன் மூலம் விளங்கிட வில்லையா?
பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் கருப் பொருளாக அதிக அளவில் "தந்தை பெரியாரியல்" அமைந்திருப்பதும் நோக்கத் தக்கதாகும்.
"மண்டைச் சுரப்பை உலகு தொழும்" - என்ற புரட்சிக் கவிஞரின் தொலைநோக்கு மலர்ந்து மணம் வீசுகிறது.
வாழ்க பெரியார்!
வளர்க அவர்தம் தத்துவம்!
No comments:
Post a Comment