பத்திரிகை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை,அக்.12- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 10.10.2021 அன்று சென்னையில், 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' நிறுவ னத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச் சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழின் "Merchants of Madras" என்ற புதிய வாராந்திர பக்கத்தை வெளியிட்டு உரையாற் றினார்.
அவர் உரையில் குறிப்பிட்ட தாவது: 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழின் சார்பில் நடைபெறக் கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே நானும் கலந்துகொண்டு உங்களிடத்திலேஒரு சில வார்த்தை களை எடுத்துச்சொல்லக்கூடிய வாய்ப்பினை பெற்றமைக்கு இந்த வாய்ப்பினை வழங்கியிருக்கக்
கூடிய இந்த நாளிதழின் ஆசிரியர் அருண் ராம் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவிற்கும் எனது நன்றியை மீண்டும் ஒருமுறை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
2008-ஆம்ஆண்டுஏப்ரல்13-ஆம் தேதி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளி தழ் சென்னை பதிப்பு தொடங்கப்பட் டது. அதை தொடங்கி வைத்தவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரால் தொடங்கி வைக்கப் பட்ட நேரத்தில் நானும் கலந்து கொண்டவன் என்ற உரிமை எனக்கு இருக்கிறது. அப்போது முதலமைச் சரோடு நானும் பங்கெடுத்த நினைவுகள் மறக்க முடியாதவை ஆகும்.
எப்போதும் வண்ணமயமான தாக - பல்சுவை நிரம்பியதாக - அனைத்துத் துறையைச் சார்ந்த தகவல்களையும் மொத்தமாகக் கொடுப்பதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' இருக்கிறது. அதனால்தான் அனைத்துத் தரப்பினரது ஆதரவை அது பெற்றுள்ளது.
கல்வி, மருத்துவம், சினிமா, மகளிர், கலைகள் வரிசையிலே வர்த்தகம் - தொழில் தொடர்பான செய்திகளை வழங்குவதற்காக 'மெர்ச்செண்ட்ஸ் ஆஃப் மெட்ராஸ்' என்ற ஒரு புதிய பகுதியை தொடங்கி இருப்பதை கண்டு நான் உள்ள படியே மகிழ்ச்சியடைகிறேன்.
அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தொழில்துறை குறித்த செய்திகள் அதில் அதிகம் இடம்பெறும் என்பதை அறிந்து இன்னும் அதிக மாக மகிழ்ச்சியடைகிறேன்.
தொழில்துறை என்று போட்டு வடமாநிலச் செய்திகளையே அதிகம் போட்டுவிடாமல் தமிழ்நாடு குறித்த செய்திகள் அதிகமாக இருக்க வேண் டும், என்னுடையவேண்டுகோளாக வும் நான் இங்கே எடுத்து வைக் கிறேன், அப்படித்தான் இருக்கக் போகிறது.
புதிய அரசின் முன்னெடுப்புகள்
புதிய அரசு அமைந்த பிறகு எத்தனையோ முன்னெடுப்புகளை நாங்கள் செய்து கொண்டிருக் கிறோம்.
இதில் முக்கியமானது இந்த மேடையில் அமர்ந்திருக்கும்எஸ்.நாராயண், அவர் உள்பட முக்கிய மான அய்ந்து ஆளுமைகளைக் கொண்டு பொருளாதார ஆலோச னைக் குழுவை நியமித்திருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும்.
இந்தியாவில் எந்த மாநிலமும் அமைக்காத ஆலோசனைக் குழு தமிழ்நாட்டில் மட்டும்தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்று பல்வேறு பத்திரிகைகள் பாராட்டி எழுதியிருக்கின்றனர்.
பேராசிரியர் ரகுராம் ராஜன் - இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர்!
எஸ்தர் டஃப்லோ - உலகத்தின் உயரிய நோபல் பரிசு பெற்றவர்!
அரவிந்த் சுப்பிரமணியம் - ஒன்றிய அரசின் தலைமைப் பொரு ளாதார ஆலோசகராக இருந்தவர்!
ஜான் ட்ரீஸ் - பொருளாதார நிபுணர், அமர்த்தியா சென்னுடன் இணைந்து புத்தகம் எழுதியவர்!
எஸ்.நாராயண் - ஒன்றிய அரசின் நிதிச் செயலாளராக இருந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் திறம்பட செயல்பட்ட வர், வழிநடத்தியவர்! இவர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு அமைத்துள்ளோம்.
திராவிட மாடல்
எஸ்.நாராயண் தனது புத்தகத் தில் குறிப்பிட்டுக்காட்டியுள்ளார் ''கலைஞர் ஆட்சிக் காலமானது சமூக மாற்றத்துக்கான அடித்தளமாக கிராம அளவிலும் கூட்டுறவு மட் டத்திலும் அமைப்பு ரீதியாகவும் அமைதந்தது" என்று எழுதி இருக் கிறார்கள்.
இதுதான் "திராவிட மாடல்" என்று குறிப்பிட்டுள்ளார்!
அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி!
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி!
அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி!
இது தான் திராவிட மாடல் என்பது.
அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என் னுடைய ஆசை! அதனை நோக்கித் தான் எங்களுடைய எல்லா திட்ட மிடுதல்களும் அமைந்து கொண்டி ருக்கின்றன.
'முதலீட்டாளர்களின் முதல் முகவரி' - தமிழ்நாடு
திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த இந்த நான்கு மாத காலத்தில் - தொழில்துறை புத்து ணர்வு அடைந்துள்ளது. இரண்டு முக்கியமான மாநாடுகளை அரசு நடத்தியிருக்கிறது.
'முதலீட்டாளர்களின் முதல் முகவரி' - தமிழ்நாடு என்ற மாநாட்டை சென்னையில் நடத்தினோம். மிக முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற மாநாடு அது. தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநி லமாக தமிழ்நாட்டை உயர்த்துவதே எனது இலட்சியம் என்று அந்த மாநாட்டில் நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அதற்காக தொழில் புரிவதை எளிமை ஆக்க ஒற்றைச் சாளர முறை Single Window System இணையதளம் 2.0-அய் நான் தொடங்கி வைத்தேன். புதிய தொழில்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்க வேண்டுமானால் உள்கட்டமைப்பை உலகத் தரம் வாய்ந்ததாக அமைக்க வேண்டும்.அதற்கான பணிகளையும் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். அந்த மாநாட்டில்தான் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு 35 நிறுவனங் களுடன் தமிழ்நாடு அரசு புரிந் துணர்வு ஒப்பந்தம் போட்டது.முதன் முதலாக 17,141 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது.இதன் மூல மாக 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.
"ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு"
அடுத்ததாக சில வாரங்களுக்கு முன்னால் ஏற்றுமதி தொடர்பான ஒரு மாநாட்டைச் சென்னையில் நடத்தினோம். "ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு" என்று அந்த மாநாட்டுக்குத் தலைப்பு கொடுத்து இருந்தோம். அன்றைய தினம் 2,180 கோடி ரூபாய் மதிப் பிலான 25 திட்டங்களுக்கான புரிந் துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள் ளது. இதன் மூலமாக 42 ஆயிரத்து 145 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இப்படி பல்வேறு நிறுவனங்கள் தொடங்க இருக்கின்றன.
1.93 இலட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன், இந்தியாவிலேயே, தமிழ்நாடு மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கி வருகிறது.இதனை முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கு அதற்கான முழுமூச்சில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்காக தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை வெளியிட்டு இருக்கிறோம்.
மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனக் கையேட்டையும் வெளி யிட்டு உள்ளோம். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களும் அதிகமாக வேண்டும். ஏற்றுமதி ஆகும் பொருள்களும் அதிகமாக வேண்டும். அதற்கான அனைத்து திட்டமிடுதல்களையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
விமர்சனமும் பாராட்டும்
கரோனாவைக் கட்டுப்படுத்திய தில் தொடங்கி - தமிழ்நாடு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது வரை இந்தியாவின் கவனத்தை இன் றைய தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இந்த வெற்றிகரமான நடவடிக்கை களை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லுங்கள்.அரசைப் பாராட்டி எழுதுங்கள் என்று நான் கட்டளை போடவில்லை.விமர் சனங்கள் வையுங்கள். அதனை ஏற்றுக்கொள்ள திறந்த மனத்தோடு தயாராக இருக்கிறோம். என்னு டைய வருத்தமெல்லாம் சிறு தவறு நடக்கும்போது அதனை பெரிதாக விமர்சிக்கும் சில பத்திரிகைகள் - பெரிய நன்மைகளைச் செய்யும் போது சிறு அளவில் கூட பாராட் டுவது இல்லையே என்பதுதான் என்னுடைய வருத்தம். பாராட்ட வேண்டியதற்கு பாராட்டுபவருக்கு தான் திட்டுவதற்கான உரிமையும் இருக்கிறது என்பதை அனைத்து ஊடகங்களும் மறந்துவிட வேண் டாம் என்று அனைத்து ஊடகங் களுக்கும் நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
"காரிருள் நீக்கும் கதிரொளியாகச் செயல்படுங்கள்" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சென்னைப் பதிப்பை தொடங்கி வைத்து பேசும் போதுமுத்தமிழறிஞர்தலைவர் கலைஞர் சொன்னார்கள். அனைத்து ஊடகங்களும் அப்படிச் செயல்பட வேண்டும் என்பதை இந்த விழாவின் மூலமாக என்னுடைய வேண்டு கோளாக நான் எடுத்து வைக்க கடமைப்பட்டுள்ளேன். 200-ஆவது ஆண்டுவிழாவை நோக்கி நெருங்கி வரும் டைம்ஸ் ஆஃப் பல்லாண்டுகள் பரவி நின்று தமிழ்நாட்டின் புகழை இந்தியாவுக்கு, உலகத்துக்கு எடுத் துச் செல்ல வேண்டும் என்று நெஞ்சார மனதார தமிழ்நாடு முதல மைச்சர் என்ற முறையில் வாழ்த்தி விடைபெறுகிறேன்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ் தான், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு பொருளாதார ஆலோ சனைக் குழுவின் உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாள ருமான எஸ்.நாராயண், உள்ளிட் டோர் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment