இன்றைய முக நூல் பதிவில், ஒரு பதிவு தந்தை பெரியார் படம் இடம் பெற்றிருக்கும் நோட்டீசாக இருந்தது! அந்த நோட்டீஸ் அனைத்து நாயுடு சங்கங்களின் நோட்டீசாகும் . அனைத்து நாயுடு சங்கங்களின் கலந்தாய்வு கூட்ட நோட்டீசில் பெரியாரின் படத்தை இடம் பெறச் செய்து, ஜாதி கட்ட மைப்பிற்குள் கொண்டு செல்லும் முதற் கட்ட முயற்சியாக தெரிகிறது! இதை கண்டு மிகவும் மனம் வருந்தி கோபக் கனலோடு, அந்த நாயுடு சங்க பிரமுகரோடு தொடர்பு கொண்டு (அந்த நோட்டீசில் நாயுடு சங்க பிரமுகரின் போன் நெம்பர் இடம் பெற்றிருந்த்து. போன் நெ : 0416 -2246745, 9443627024) ஒரு ‘சமூக நீதி மாமேதை தந்தை பெரியாரை ஜாதிக் கட்டமைப் பிற்குள் கொண்டு வருவது மிகப் பெரிய தவறு என சுட்டிக் காட்டி, மேலும் அதற்கான சட்ட நடவடிக் கைகள் மேற்கொள்வோம்' என மிகவும் நாகரிக முறையில் பேசி னேன். அதற்கு அந்த நாயுடு சங்க பிரமுகர் இனி மேல் இந்த தவறு நடக்காது என ஒப்புக் கொண்டு விட்டார். இருந்தாலும் என் மனம் சமாதானம் செய்து கொள்ள விரும்பவில்லை!
வாழ்க பெரியார் !
ஜாதியை ஒழிப்போம் !
சமத்துவம் காண்போம் !
- செ.கண்ணன்,
தேனி மாவட்டம்
No comments:
Post a Comment