தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்கள் - விரைவாக முடிக்க டி.ஆர்.பாலு வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்கள் - விரைவாக முடிக்க டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

சென்னை,அக்.12- நாடாளுமன்ற ரயில்வே நிலைக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற தி.மு.. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. சென்னையில் நேற்று (11.10.2021) தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம்  ரயில்வே திட்டங்கள் தொடர் பாக நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன், ஜெகத் ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன் உள் ளிட்டோர் அளித்த மனுக்களை வழங்கி, தமிழ்நாட்டுக்கான ரயில்வேத் திட்ங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், தலைமை திட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), .கருணாநிதி (பல்லாவரம்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்) உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment