விழுப்புரம் மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

விழுப்புரம் மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

விழுப்புரம், அக்.7 விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 143ஆவது பிறந்த நாள் 17.9.2021 அன்று சமூகநீதி நாளாக பல ஊர்களில் விழாக்கள் கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் நகரில் மாவட்டத் தலைவர் .சுப்பராயன் தலைமையில் நகர .. தலைவர் பேராசிரியர் மு.வி.சோமசுந்தரம் முன்னிலையில் நகர கழக செயலாளர் .சதீஷ் ஏற்பாட்டில் காலை 9 மணிக்கு கழகக்கொடி ஏற்றப்பட்டது. இனிப்பு வழங்கப்பட்டது.

விழுப்புரம் நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் .சுப்பராயன் தலைமையில் கழகத்தோழர்கள் 25 பேர் கலந்து கொள்ள பதாகை, கழகக்கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவிக்கப்பட்டது. உறுதிமொழி ஏற்கப்பட்டது, இனிப்பு வழங்கப்பட்டது.

விழுப்புரம் நகரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல அலுவலகம் மற்றும் பணிமனை முன்பு உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் .சுப்பராயன் தலைமையில் மண்டல தொழிலாளரணி தலைவர் சே..கோபண்ணா, மண்டல தொழிலாளரணி செயலாளர் பெ.சக்கரவர்த்தி, மண்டல தொழிலாளரணி பொருளாளர் பெ.பெரியார்செல்வன், மண்டல தொழிலாளரணி மண்டல அமைப்புச் செயலாளர் செந்தமிழ் கோமான், மண்டல தொழிலாளரணி இணைச் செயலாளர் நாகராசன், மண்டல தொ..துணைச் செயலாளர் நடராசன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. பணிமனை முன் புதியதாக திராவிடர் கழக தொழிலாளர் பேரவை (மண்டலம்) பெயர் பலகை திறக்கப்பட்டு, கழகக்கொடி ஏற்றப்பட்டது. இனிப்பு வழங்கப்பட்டது.

கலந்து கொண்டோர்: மாவட்டத் தலைவர் .சுப்பராயன், மாவட்டச் செயலாளர் அரங்க.பரணீதரன், மாவட்ட அமைப்பாளர் சே..கோபண்ணா, மாவட்ட துணைத் தலைவர் .திருநாவுக்கரசு, மாவட்ட .. தலைவர் வே.இரகுநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் .பழனிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் .பகவன்தாஸ், விழுப்புரம் நகர தலைவர் கொ.பூங்கான், நகர செயலாளர் .சதீஷ், தொழிலாளரணி மண்டலச் செயலாளர் பெ.சக்கரவர்த்தி, மண்டல தொழிலாளரணி அமைப்புச் செயலாளர் செந்தமிழ் கோமான், மண்டல தொழிலாளரணி பொருளாளர் பெ.பெரியார் செல்வன், மண்டல தொழிலாளரணி இணைச் செயலாளர் நாகராசன், துணைச்செயலாளர் நடராசன், கீழ்ப்பெரும்பாக்கம் டி.முருகன், எசாலம் டி.அருண்குமார், நெகனூர்புதூர் கணேசன், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளரணி அமைப்பாளர் கலையரசன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் கவுதமன், மேனாள் மாவட்ட அமைப்பாளர் துரை, பெரியார் பிஞ்சு .ஆத்திஸ்ட், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெ.நாகராசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பங்கேற்றனர்.

செஞ்சி: செஞ்சி நகரில் இரண்டு இடங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மாவட்ட அமைப்பாளர் சே..கோபண்ணா தலைமையில் கொண்டாடப்பட்டது. இரண்டு இடங்களிலும் கழக்கொடி ஏற்றப்பட்டது. இனிப்பு வழங்கப்பட்டது.

கலந்து கொண்டோர்: மாவட்ட துணைத் தலைவர் .திருநாவுக்கரசு, மா...தலைவர் வே.இரகுநாதன், மாவட்ட மகளிரணி தலைவர் வெ.கீதா, மு.மா.அமைப்பாளர் .துறை, நெகனூர்புதூர் கணேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் நகரில் சேந்தநாடு எஸ்.கவிக்குமார், பி.பழனிராஜ், ஆர்.பாரதிராஜ், வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நல்லாப்பாளையம்: மாவட்ட துணைச்செயலாளர் .இரமேஷ் தலைமையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கழகக் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது.

கலந்து கொண்டோர்: காணை ஒன்றிய திமுக செயலாளர் முருகன், கிளைக்கழக திமுக செயலாளர் ராசேந்திரன், கண்டாச்சிபுரம் கிளைக்கழக தலைவர் நாகராசன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் கவுதமன், நல்லாப்பாளையம் கிளைக்கழக செயலாளர் ஆறுமுகம், நரசிங்க பெருமாள் (திமுக), வளவராசன் (திமுக), வெங்கடேசன் (திமுக) மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் கிராமம், இந்திராநகர் குடியிருப்பு ஆகிய இரண்டு பகுதிகளில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவும், கழகக்கொடிகளும், மாவட்ட துணைச் செயலாளர் இரமேஷ் தலைமையில் கண்டாச்சிபுரம் கிளைக் கழகத் தலைவர் நாகராசன் முன்னிலையில் கழகக் கொடி ஏற்றப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது.

கலந்துகொண்டோர்: முகையூர் ஒன்றிய திமுக செயலாளர் ரவி, மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணாயிரம், மாவட்ட மாணவர் கழக செயலாளர் கவுதமன், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அமைப்பு நிர்வாகி கலையரசு, நல்லாப்பாளையம் கிளைக்கழக தலைவர் ஆறுமுகம், முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி நகரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா எசாலம் தலைமை ஆசிரியர் (...) எல்.ரவிச்சந்திரன் தலைமையில் மேனாள் பேரூராட்சி திமுக தலைவர் மலர் மன்னன் முன்னிலையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

கலந்து கொண்டோர்: ஓவிய ஆசிரியர் அய்யனார், முதுகலை ஆசிரியர் கோபால், பட்டதாரி ஆசிரியர் பரத்குமார், பொறியாளர்கள் எஸ்.ஆர்.பிரபாகரன், எஸ்.ஆர்.நெடுஞ்செழியன், உதயகுமார், தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அனந்தபுரம்: அனந்தபுரம், பனமலைப்பேட்டை பெரியார் நினைவு சமத்துவபுரம் இரண்டு இடங்களில் கழகத் தோழர் அன்னியூர் வசந்தகுமார் தலைமையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவ்வமயம் இரண்டு இடங்களிலும் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. அவ்வமயம் அன்னியூர் அரிராமன், பரதன் தமிழ்வாணன், ஜீவா, விஜயக்குமார், பாரத், ஜெகதீஷ், காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய் நல்லூர் நகரம், அரும்பட்டு பெரியார் நினைவு சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் பெரியார் பிறந்த நாள் விழா ஒன்றிய தலைவர் ஆர்.பரந்தாமன் தலைமையில் கொண்டாடப்பட்டது. சிலைகளுக்கு மாலை அணிவித்து கழகக்கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. அவ்வமயம் திமுக நகரச்செயலாளர் கணேசன், இளைஞரணி திமுக செயலாளர் முருகன், மேனாள் திமுக நகரச் செயலாளர் செல்வம், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விஜய் கிருஷ்ணராஜ், .கம்யூ. மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment